தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் :எண்ணிக்கை 411-ஆக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதராணமாக நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலில்; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளது. 1,580 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3,684 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,780 பேருக்கு பாதிப்பு இல்லை. 7 பேர் வீடு திரும்பிய நிலையில் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.