அமீர்கானின் டங்கல் அமோக வசூல் செய்யுது!

அமீர்கானின் டங்கல் அமோக வசூல் செய்யுது!

டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் அமீர் கான் நடிப்பில் வெளி வந்த ‘யுத்தம்’ [ ஹிந்தியில் டங்கல் ] பல் வேறு சாதனைகளை முறியடித்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.கதை தான் படத்தின் வெற்றிக்கு மைய கருத்து என்பதை மீண்டும் நிரூபணம் செய்து இருக்கும் படம் தான் யுத்தம். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

dangal dec 26

இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் ரூ. 100 கோடியைத் தொட்டுள்ளது. வெள்ளியன்று ரூ. 30 கோடி, சனியன்று ரூ. 35 கோடி, ஞாயிறன்று ரூ. 42 கோடி என முதல் மூன்று நாள்களில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ. 107 கோடி வசூலித்துள்ளது. 2-ம் நாள் 17% வசூல் அதிகம் கண்ட டங்கல், நேற்று 22% அதிகமாக வசூலித்துள்ளது.

முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடியைத் தொடுவதென்பது இந்தியத் திரையுலகில் பெரிய சாதனையாகும். எல்லாப் படங்களாலும் இதைச் சாதிக்கமுடியாது. வரும்நாள்களில் டங்கல் படத்தின் வசூல் மேலும் அதிகமாகி, பல சாதனைகளை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!