2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!

த்திய உள்துறை அமைச்சகம் (இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம்), 2027-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான ‘வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு’ (Houselisting and Housing Census) தொடர்பாக அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. 2026, ஜனவரி 22-ஆம் தேதியிட்ட இந்த அறிவிப்பாணையின்படி, கணக்கெடுப்பு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கு வந்து 33 விதமான கேள்விகளை முன்வைப்பார்கள்.

இந்தக் கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையானது என்றாலும், தனிநபர் தகவல்களைத் தரும்போது பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியமாகும்.

கணக்கெடுப்பில் கேட்கப்படவுள்ள 33 முக்கியக் கேள்விகள்  இதோ:

  1. கட்டிட எண் (நகராட்சி அல்லது உள்ளாட்சி வழங்கியது).

  2. கணக்கெடுப்பு வீட்டு எண்.

  3. வீட்டின் தரைத்தளம் எந்தப் பொருளால் ஆனது?

  4. வீட்டின் சுவர் எந்தப் பொருளால் ஆனது?

  5. வீட்டின் கூரை எந்தப் பொருளால் ஆனது?

  6. வீட்டின் பயன்பாடு (குடியிருப்பு / வணிகம் போன்றவை).

  7. வீட்டின் தற்போதைய நிலை.

  8. குடும்ப எண்.

  9. குடும்பத்தில் பொதுவாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை.

  10. குடும்பத் தலைவரின் பெயர்.

  11. குடும்பத் தலைவரின் பாலினம்.

  12. குடும்பத் தலைவர் பட்டியல் சாதி (SC) / பழங்குடியினரா (ST) / மற்றவரா?

  13. வீட்டின் உரிமை நிலை (சொந்த வீடா அல்லது வாடகை வீடா?)

  14. குடும்பத்தின் வசம் உள்ள தனிப்பட்ட அறைகளின் எண்ணிக்கை.

  15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.

  16. குடிநீரின் முக்கிய ஆதாரம்.

  17. குடிநீர் ஆதாரம் கிடைக்குமிடம் (வீட்டிற்குள்ளேயேவா அல்லது வெளியேவா?)

  18. வெளிச்சத்திற்கான (மின்சாரம்) முக்கிய ஆதாரம்.

  19. கழிப்பறை வசதி உள்ளதா?

  20. கழிப்பறையின் வகை.

  21. கழிவுநீர் வெளியேறும் வசதி.

  22. குளியலறை வசதி உள்ளதா?

  23. சமையலறை மற்றும் LPG / PNG எரிவாயு இணைப்பு வசதி.

  24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்.

  25. ரேடியோ / டிரான்சிஸ்டர் வசதி.

  26. தொலைக்காட்சி (TV) வசதி.

  27. இணைய வசதி (Internet Access).

  28. லேப்டாப் / கணினி வசதி.

  29. தொலைபேசி / மொபைல் போன் / ஸ்மார்ட்போன்.

  30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபட்.

  31. கார் / ஜீப் / வேன்.

  32. குடும்பத்தில் உட்கொள்ளப்படும் முக்கிய உணவு தானியம்.

  33. மொபைல் எண் (கணக்கெடுப்புத் தொடர்புகளுக்கு மட்டும்). 

மக்களுக்கான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு

அரசாணைப்படி தகவல்களைச் சேகரிக்க வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவது கடமையென்றாலும், சில பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

  • அடையாள அட்டை: உங்கள் வீட்டிற்கு வருபவர் உண்மையான கணக்கெடுப்பு அலுவலர் தானா என்பதை உறுதிப்படுத்த, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைச் சரிபார்க்கவும்.

  • தனிநபர் ரகசியம்: இந்தக் கேள்விகள் அனைத்தும் உங்கள் வீட்டின் வசதிகள் மற்றும் வாழ்க்கை நிலையை அறியவே கேட்கப்படுகின்றன. வங்கி ரகசியங்கள், OTP அல்லது தனிப்பட்ட நிதி விவரங்களைச் பகிரத் தேவையில்லை.

  • சரியான தகவல்: தவறான தகவல்களைத் தருவது எதிர்காலத் திட்டமிடலைப் பாதிக்கும் என்பதால், உண்மை விவரங்களை மட்டும் வழங்கவும்.

  • மொபைல் எண் பயன்பாடு: அரசாணையின்படி, மொபைல் எண் என்பது ‘கணக்கெடுப்பு சார்ந்த தொடர்புகளுக்கு மட்டுமே’ (For census related communications only) பெறப்படுகிறது என்பதை நினைவில் கொள்க.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஒரு கருவி. அதில் பங்கேற்போம், அதே சமயம் விழிப்புணர்வுடன் இருப்போம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!