32°C
விளம்பரம்
Advertisement

லோக்பால் மசோதா நிறைவேறியது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்!

admin சேலம் Published: December 18, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த அன்னா ஹசாரே பள்ளி குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி,தன உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.தற்போது இம்மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில்,அடுத்தக் கட்டமாக 5 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு நியமிக்கப்படும்.இந்தக் குழுவினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பர். முதல்கட்ட விசாரணை 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே விசாரணையை நீட்டிக்கலாம். ஊழல்வாதிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
anna fast over owl 18
திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம், சமாஜ்வாதி தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்த ஹசாரே, மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமைக்கும் பாராட்டு தெரிவித்தார். ஊழலை எதிர்கொள்ள தேசம் தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்:”லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது ஊழலுக்கு எதிரான ஒரு நல்ல முயற்சி. இதனால் 100% ஊழல் தடுக்கப்படாவிட்டாலும் கூட 50% அளவாவது ஊழல் நிச்சயம் தடுக்கப்படும். மக்களுக்கு இதனால் சற்று ஆறுதல் பெறுவர்.” என்றார் அவர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்