மேரேஜாகி சூசைட் பண்ணுவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அதிகம்.. அதிகம்!
இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் விவசாயிகளல்லாதவர்களில் திருமணம் ஆன பெண்களைவிட, திருமணம் ஆன ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். விவாகரத்து, மற்றும் மனைவி இறந்த பின்னரும் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.பெரும்பாலான தற்கொலையானது திருமணம் ஆனவர்களாலே செய்யப்படுகிறது என்று தெரிய வருகிறது

தேசிய குற்றப்பிரிவு தகவல்களின்படி, கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் 60,000 திருமணம் ஆன ஆண்கள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். இதே ஆண்டு தற்கொலை செய்துக் கொண்ட பெண்களின் எண்ணிக்கையானது 27,000 ஆகும். இதேபோல் மனைவியை இழந்த ஆண்கள் 1,400 பேரும், கனவரை இழந்த பெண்கள் 1,300 பேரும் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். இதேபோல் விவகாரத்து ஆன பின்னரும் தற்கொலை செய்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையானது அதிகம் ஆகும். விவகாரத்து ஆன பின்னர் தற்கொலை செய்துக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 410 ஆகும். இதுவே ஆண்களின் எண்ணிக்கையானது 550 ஆகும்.
அண்மையில் தேசிய சுகாதார கழகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விபர கணக்கின்படி, மனநல பாதிப்பு காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 7000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ல் மனநல பாதிப்பால் 7769 பேரும், 2013ல் 8006 பேரும், 2014ல் 7104 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே .தேசிய குற்றப்பிரிவு தகவலின்படி பெரும்பாலான தற்கொலையானது திருமணம் ஆனவர்களாலே செய்யப்படுகிறது. தற்கொலை செய்தவர்களில், 66 சதவிதம் பேர் திருமணம் செய்தவர்களே. இதற்கிடையே திருமணம் ஆகாமல் தற்கொலை செய்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையானது 21 சதவிதம் ஆகும். விவகாரத்து ஆன பின்னர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆண் மற்றும் பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அனைத்தும் 3%க்கும் குறைவாகும்.
முதல்முறையாக திருமணம் ஆன பெண்களைவிட, திருமணம் ஆன ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக் கொண்டுஉள்ளனர் என்பதை காட்டுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் சுமார் 90,000 வரையிலான ஆண்கள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். சுமார் 42,000 பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவர்களின் பெரும்பான்மையான பிரச்சனையானது குடும்ப பிரச்சனை என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது.


