32°C
விளம்பரம்
Advertisement

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை? – மோசடியை அம்பலமாக்கிய ஸ்டிங் ஆப்ரேசன்!

admin சேலம் Published: February 26, 2014 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அரசியல் வாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, உண்மையைத் திரித்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று உண்மையை சேகரித்து வெளியிட்டு உள்ளது. இதை அடுத்து கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்கலாமா என்று தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 15 கருத்துக் கணிப்பு நிறுவனங்களுடன் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ரகசிய புலனாய்வு விசாரணை நடத்தியதில் 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதற்கான ஆவணங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் தொலைகாட்சி நிறுவனத்திடம், தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
political parties
டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய “ஸ்டிங் ஆபரேஷன்” மூலம் இப்போதும் கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அது நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போல போய் அணுகியுள்ளனர்r
இதில் வண்டவாளம் தண்டவாளம் ஏறிய சி வோட்டர்.மற்றும் சிவோட்டர் மூலம் கருத்துக் கணிப்புகளை வாங்கிப் போட்டு வந்த இந்தியா டுடேயும் தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக வட இந்திய சேனல்களில் இவ்ர்களின்கருத்துக் கணிப்புகள்தான் உரத்தக் குரலில் ஒலித்து வந்தன. இந்நிலையில்தான் நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் ஸ்டிங் ஆபரேஷன். இதில் பல கருத்துக் கணிபப்புகள் பொய்யானவை என்று அது கூறுகிறது.அதாவது கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போல போய் அணுகி இந்த ஸ்டிங்கை நடத்தியுள்ளனர்.

இந்த நிறுவனங்களிடம் பேசும்போது கட்சிகளுக்காக இரண்டு டேட்டாக்களை அவர்கள் தயார் செய்வது தெரிய வந்தது. அதாவது உள்ளது உள்ளபடியே ஒரு டேட்டா. இன்னொன்று திரித்துக் கூறப்பட்ட தகவல்களுடன் கூடியது.இந்த இரண்டு டேட்டாக்களுக்கும் தனித் தனியாக ரேட் போட்டு வசூலித்துள்ளனர்.இது போக தங்களது தேவைக்கேற்ப தகவல்களை திரித்துத் தர வேண்டுமானாலும் அதற்கும் தனியாக ரேட் தர வேண்டுமாம்.குறிப்பாக இந்த மோசடி நிறுவனங்களில் சி வோட்டர்தான் நிறைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. எல்லாமே பாஜகவுக்கு ஆதரவானதுதான். இதனால் இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பெரும் மோசடியானவை என்ற கருத்து எழுந்துள்ளதையடுத்து .கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்கலாமா என்று தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Election Commission likely to ban opinion polls
**********************************************************************
The Election Commission (EC) has started probing the authenticity of opinion polls after a sting operation by a TV channel.”We have asked for the raw footage of tapes from the channel, and they have agreed to give. After forensic analysis and thorough examination of the footage, we may take a call on banning opinion polls. This is already an existing demand,” a top EC official told press..

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்