32°C
விளம்பரம்
Advertisement

ச்சீச்சீ… ஹன்சிகா காதலும் புளிக்கிறது! – சிம்பு அறிவிப்பு!

admin சேலம் Published: February 26, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சிம்பு இன்று ”ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாகவும் இதுவரை, ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டதால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
hansika-in-simbu-nayan-
சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிப்பவர்கள் மெய்யாலுமே காதல் வயப்படுவதும், அது குறித்துக் கேட்டால் ‘ எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக்து’ என்று சொலவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதுதான்.ஆனால், சிம்பு விஷயத்தில் நயன்தாரா முதல் ஹன்சிகா வரை இவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பவர்கள் ஒவ்வொருவரையும் ரியல் லவ்வராக்கி கொஞ்ச நாளில் ‘ஐயே.. நானா? லவ்வா? என்ற ரீதியில் ஸ்டேட்மெண்ட் விடுவது வாடிக்கையாகி விட்டது.

இதைப் போல்தான் சிம்புவும், ஹன்சிகாவும் நிஜமாலும்காதலிப்பதாகவே கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து ‘வழக்கம் போல்’ விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார் என்று செய்தி பரப்பப் பட்டது. ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது சிம்பு, ஹன்சிகா காதலில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுவும் ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இதைக் காரணம் காட்டி இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அதையடுத்து திடீரென்று நயன்தாரா எனக்கு ஜஸ்ட் தோழிதான். ஹன்சிகாதான் என் காதலி என்றெல்லாம் சிம்பு பேட்டி அளித்தார். இதையடுத்து மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று கிசுகிசு செய்தி வெளியானது.ஆனால் ஹன்சிகா இதனை மறுப்பதுபோல் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் கூறினார்.

இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

மேலும், ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம்.

எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது. இந்த அறிக்கையை என்னுடைய நண்பர்கள், நெருங்கியவர்கள், ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். இந்த முடிவால் நான் மிகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்