தமிழ் குரல் / AI Voice
“கடவுளுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரி செலுத்தினால் நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர் வரிகட்டும் போதும் மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேச முயல்கின்றனர். ” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

வருமானவரி துறை சார்பில் தேசிய கலைவிழா (2013-14) 2 நாட்களுக்கு சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி தலைமை தாங்கினார்.அதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கமல்ஹாசன் இதுநாள்வரை தனது வருமான வரிக்கணக்கை முறைப்படி குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவும், ஒரு ஆண்டுக்கான வரியை அந்த ஆண்டிலேயே செலுத்தியும் பல ஆண்டுகளாக வருமான வரித்துறையிடமிருந்து சிறந்த நேர்மையான மனிதர் விருதை பெற்று வந்திருக்கிறார் என்ற முறையில் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பேசும் போது”.அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும். என் தந்தையாரும் எனக்கு அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.கடவுளுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரி செலுத்தினால் நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். ஆனால் சிலர் வரிகட்டும் போதும் மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேச முயல்கின்றனர். வரியினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால் வரியின் முக்கியத்துவமும் நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில் வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும்
அதாவது உண்மையில் வரி செலுத்துவது என்பது நாட்டின் கட்டமைப்புக்கு நம்முடைய பகுதியாக அல்லது பங்காக நினைத்து நாம் செலுத்த வேண்டும். நானும் அப்படி நினைத்து தான் செய்து வருகிறேன். அடிப்படையில் இந்த எண்ணம் இருந்தால் வரி செலுத்துவதில் எந்த பிரச்சினையும், தயக்கமும் வராது.பல்வேறு பணி சுமைகளின் மத்தியில் தங்களது திறமைகளை வெளிகாட்ட வந்திருக்கும் உங்களிடத்தில் இருந்து தான் உண்மையான கலை மற்றும் திறமை வெளிவரும். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.
