32°C
விளம்பரம்
Advertisement

இந்தியாவில் மேலும் 16 “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல்கள்!

admin சேலம் Published: December 23, 2013 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்னை அருகே கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமாக காணப்படும் மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. டுயுட் இந்தியா ஹோட்டல்ஸ் மற்றும் ஐஎச்ஜி கூட்டு சேர்ந்த பின்னர் இந்தியாவில் திறக்கப்படும் 2வது ஹோட்டல் இதுவாகும். இவர்களுடைய கூட்டமைப்பின் கீழ் இந்தியாவில் மேலும் 19 புதிய ஹோட்டல்கள் திறக்கபப்ட உள்ளன என்று தெரிய வந்துள்ளது.
vanikam mahendra hotel 23
அண்மையில் இன்டர்-காண்டினென்டல் ஹோட்டல்ஸ் குழுமம் (ஐ.எச்.ஜி.)- டூயட் இந்தியா குழுமம் இணைந்து உருவாக்கிய “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஹோட்டலை சென்னை மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் தொடங்கியுள்ளது..ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டலில், 140 அறைகள் உள்ளன. சென்னை நகரில் எல்லைக்குள் இருக்கும் உலக புகழ்பெற்ற மென்பொருள் மற்றும் ஆட்டோ மோட்டிவ் நிறுவனங்களுக்கு வருகை தரும் வர்த்தக பயணிகளுக்கு ஏற்ற பல அம்சங்கள் இந்த ஹோட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் எளிதாக சாலை வசதியாக அடையும் வகையில் உள்ள இந்த ஹோட்டலுக்கு வருகை தரும் பயணிகளுக்காக சென்னையை சுற்றுப்பார்க்கவும், ஷாப்பிங் செல்லவும் வசதிகள் செய்து தரப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறதோ அதே வசதிகள் இங்கு தங்கும் பயணிகளுக்கும் கிடைக்கும்.

விருந்தினர்களின் அறைகளில் கம்பியில்லா இணையதள தொடர்பை வழங்கும் வைஃபி இணைப்புகள் இலவசம். இதனால் ஹோட்டலில் நீங்கள் தங்கியிருக்கும் போது எந்த நேரமும் தடையில்லாமல் இணைய தொடர்புடன் இருக்கலாம்.

காலை உணவு இலவசம். அவற்றை உண்ணலாம் அல்லது எடுத்தும் செல்லலாம்.அறைகளில் உயர்த்தரமான படுக்கைகள், வாடிக்கையாளர்களே செயல்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளுடன் கூடிய வர்த்தக மையம் மற்றும் சலவை அறைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல் அறைகளில் மின்னணு பாதுகாப்பு சாதனங்களின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடம்பரமான குளீயல் அறைகள், 32 அங்குல திரையுடன் கூடிய தொலைக்காட்சி, ஐ பாட் இணைப்பு நிலையங்கள், டீ மற்றும் காபி போட்டுக்கொள்ள சாதனம், மினி குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. உடற்பயிற்சி கூடம், கூட்டம் நடத்த இரண்டு அறைகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மேலும் ‘ஃபைவ் ஸ்பைசஸ்’ என்ற பெயரில் உணவகமும் இங்கு உள்ளது. இதில் ஆசிய மற்றும் பல கண்டங்களை சேர்ந்த உணவு வகைகள் கிடைக்கும் என்பதுடன் இவர்களுடைய கூட்டமைப்பின் கீழ் இந்தியாவில் மேலும் 19 புதிய ஹோட்டல்கள் திறக்கபப்ட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்