எமகாதகி – விமர்சனம்!

எமகாதகி – விமர்சனம்!

கொலையே செய்தாலும் பிணம் காட்டிக்கொடுக்காது எனும் தைரியம் தான் பல க்ரைம்களின் அடிப்படை .ஒரு வேளை பிணம் காட்டிக்கொடுத்தால் ? அது தான் இப்படம் .மரணமடைந்த ஒரு இளம்பெண்ணின் பிணம் வீட்டை விட்டு நகர மறுக்கிறது?? ஏன்.., ஏன்.. என்னாச்சு? நம் நாட்டார் கதைகளின் பிரதி மாதிரி ஒரு கதை.அறிமுக டைரக்டர், ஒரு ஸ்மால் வில்லேஜ், நான்கைந்து மெயின் கேரக்டர், அதைத்தாண்டி ஊர் மனிதர்கள் 50 பேர் இவர்களை வைத்துக் கொண்டு நீட்டான எக்ஸிக்யூசன் மூலம் மிரட்டியிருந்தார்கள். கொஞ்சம் அமெச்சூர்த்தனங்கள் இருந்தாலும் பெரிதாக இடிக்கவில்லை.சில படங்களுக்கு டைட்டில் ஒன்றாக இருக்கும் கதை வேறாக இருக்கும், இன்னும் சில படங்களுக்கு புரியாத டைட்டில்கள் வைப்பார்கள். ஆனால் எமகாதகி படத்திற்கு வைத்திருக்கும் டைட்டில் ஃபர்பெக்ட்!

தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்கில் உள்ள வில்லேஜ் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன், அவர் மனைவி கீதா கைலாசம் மற்றும் மகள் லீலா ( ரூபா கொடுவாயூர்). மேரேஜ் ஆகாத இளம் பெண்ணான இவருக்கு லேசான ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. அவ்வப்போது அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுவதால் சுவாச மருந்துடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். ஒரு சூழலில் வெளியில் சென்று இருந்த அப்பா வீட்டிற்கு வந்து கோபத்துடன் எல்லோரையும் திட்டுகிறார். “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்” என்று மகள் லீலா கேட்கும்போது கோபத்தில் அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார். . இதனால், அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிடுகிறார் ரூபா. நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த கீதா, தனது மகள் ரூபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் உறைகிறார் கீதா.மேலும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். லீலா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்ததாக கூறி சமாளித்து விடலாம் என்று அப்படியே சொல்லி லீலா உடலை இறுதிச் சடங்கு செய்ய வேலைகள் நடத்துகின்றனர். கடைசியாக நீலா உடலை வெளியில் கொண்டுவர தூக்கும்போது அதை தூக்க முடியாத அளவிற்கு கனக்கிறது. ஒன்றுக்கு பத்து பேர் சேர்ந்து தூக்கியும் பிணத்தை வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவர முடியவில்லை. கூடவே உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அதை எல்லாம் பார்த்து ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது.பூஜாரி வருகிறார் பிணம் செய்யும் சேட்டையை பார்த்து ஓடி விடுகிறார். இறந்த பெண் எதற்காக இப்படி மக்களை அச்சுறுத்த வேண்டும்.?? வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காதது ஏன் என்பதே எமகாதகி படக் கதை.

ரூபா கொடுவாயூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இரண்டு மூன்று சீன்களில் உயிர்ப்புடன் தலை காட்டிவிட்டு தூக்கு போட்டு இறந்து விடுகிறார். அதன் பிறகு பிணமாகத்தான் படம் முழுவதுமே வந்து அசத்துகிறார்.பிணமாக எப்படி கவர முடியும் என்று கேட்கலாம் பிணத்திற்கு பேய் பிடித்தால் அது எப்படி நடிக்குமோ அதை கண் முன்னால் கொண்டு வந்து விட்டார் ரூபா.பிணமாக நடிக்கும் போதே அவரது முகத்தில் கோபம் புன்னகை போன்ற வித்தியாசங்கள் உணர முடிகிறது.நாயகி
லீலாவின் தந்தை செல்வராஜாக வரும் ராஜு ராஜப்பன் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.தனது கோபமும்,தாக்குதலும்தான் மகளைக் கொன்று விட்டது என்ற குற்றவுணர்வையும் வேதனையையும் கேஷூவலாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்துள்ளார்.ஹீரோயின் அம்மாவாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். அம்மா என்றால் அம்மா தான் என்று சொல்லும் அளவுக்கு அசல் அம்மா ஆகவே மாறி விட்டார்.

நாயகியின் அண்ணனாக நடித்த சுபாஷ் ராமசாமியும் க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.மற்றும் படத்தில் நடித்த ஒவ்வொரு பாத்திரமுமே அவர்களாகவே இறுதி வரை தெரிந்தார்கள். குறிப்பாக, சுபாஷ் ராமசாமியின் நண்பர்களாக வந்தவர்கள், போலீஸாக வருபவர், குடிகாரராக வருபவர், உள்ளூர் டாக்டர், ரூபாவின் பாட்டி, ஊர் பாட்டி, கிராமத்து பெண்கள், எக்ஸ் தர்மகர்த்தா அவரது மகன், மருமகள், மூட நம்பிக்கைக் குறித்து பேசும் பெண், ஹீரோவின் அப்பா என நடித்த அனைவரும் அடடே வைத்து வைத்துவிடுகிறார்கள்.

கேமராமேன் சுஜித் சாரங்கும் , மியூசிக் டைரக்டர் ஜெசின் ஜார்ஜூம்தான் இப்படத்தின் முதுகெலும்பு. அதிலும் சுஜித் கைவண்ணத்தில் ஏகப்பட்ட புதிய ஒலிகளை உணர முடிகிறது. ஒப்பாரி பாடல் அடடே சொல்ல வைக்கிறது.எடிட்டிங் மற்றும் கலரிஸ்டான ஸ்ரீஜித் சாரங் பணி பிரமிக்க வைக்கிறது. இசை ஜெசின் ஜார்ஜ் ஒரு திரில்லர் படத்திற்கு அமைதிதான் முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.

பஞ்ச்டயலாக் பேசி,அடிதடி செய்யும் ஹீரோயிசத்தை நம்பாமல் கோடிகளில் சம்பளம் வாங்கும் நாயகன், நாயகி யாரையும் நம்பாமல் ஒரு புது டைப்பான கதை, திரைக்கதையுடன் முழுக்க முழுக்க புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கும் முயலும் படப் பட்டியலில் இடம் பிடித்து விட்டாள் இந்த எம காதகி!

மார்க் 3.75/5

error: Content is protected !!