32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2483)
மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ் Running News

மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்

உலக மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் குறித்து, ‘யுகோவ்’ என்ற தனியார் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியலில், உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2-வது இடமும், ரஷ்ய அதிபர் புதின் 3-வது இடமும், போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4-வது இடமும் பெற்றுள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்தியாவின் […]

January 13, 2014 admin
“டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்’- ஆக விருப்பமா? Running News

“டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்’- ஆக விருப்பமா?

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது. தற்போதைய சூழ்நிலையில், இணையதளமானது கற்றலுக்கான தேடலை எளிதாக்கியுள்ளது. அளவில்லாத தகவல்களை உள்ளடக்கி இருந்தாலும் முறைப்படி, எளிதாகக் கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவைப்படுகிறார். இந்த தேவையை சரி செய்வதற்காக பரவலாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் முறைதான் “ஆன்-லைன் கிளாஸ்ரூம்” ஆகும். இணைய வகுப்பறைகள் […]

January 13, 2014 admin
பேஸ்புக், டிவிட்டர்’ -களில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு கடன்! – அமெரிக்க வங்கிகள் புது டிரென்ட்! Running News

பேஸ்புக், டிவிட்டர்’ -களில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு கடன்! – அமெரிக்க வங்கிகள் புது டிரென்ட்!

கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின், சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தபின், கடன் வழங்க, அமெரிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஆனால் அவைகளில் நமபகத்தன்மை இருக்காது என்பதால் வங்கிகளின் போக்குக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற் நாட்டில் உள்ள சிறிய நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர் களின், ‘பேஸ்புக்’ ‘டிவிட்டர்’ ஆகிய சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளில் கொடுத்துள்ள சுய விவரத்தில் கூறப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு கடன் வழங்கலாமா என்பது […]

January 13, 2014 admin
சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்! Running News

சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் வாகன வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனை அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியான சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகிறது.அத்துடன் முழு அடைப்பு ஒன்றுகும் அழைப்பு விடுத்திருந்தது. சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டண முறைகேட்டைக் கண்டித்தே இந்த முழு அமைப்பு நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோல்காபூரில் உள்ள டோல்கேட் ஒன்றில் வாகனத்தில் வந்த சிவசேனா கட்சியினரிடம் டோல்கேட் ஊழியர்கள் வரி செலுத்துமாறு கூறினர்.இதில் ஏற்பட்ட தகராறில் சிவசேனா ஆதரவாளர்கள் டோல்கேட்டை அடித்து சேதப்படுத்தினர். மேலும் […]

January 12, 2014 admin
அழகாக இருக்க ஆயுர்வேதத்தில் சொல்லபபடும் தீர்வுகள்! Running News

அழகாக இருக்க ஆயுர்வேதத்தில் சொல்லபபடும் தீர்வுகள்!

அழகாக இருக்க விரும்பும் நீங்கள் காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய சிறப்பான செயல்களை ஆயுர்வேதம் வர்ணித்துள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதலாக வைகறைத் துயில் எழு எனும் உபதேசம் முக்கியமானது. சூர்ய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதயவேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும். இந்த வேளையில் இயல்பாக மனம் தெளிந்து விருப்பு, வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாதிருக்கும். இரவின் தன்மையாலும், அமைதியாலும் முன் நாளின் […]

January 12, 2014 admin
எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்! Running News

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்!

ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம். படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் […]

January 12, 2014 admin
இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்! Running News

இந்திய தேசிய இளைஞர் தினம் + சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்!

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவையில் பாரதத்திலிருந்து இந்து சமயப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் விவேகானந்தர். அந்த மாநாட்டின் நோக்கங்களை வரையறுத்தவராக அவர் […]

January 12, 2014 admin
இமிக்ரேஷன் பட்டியலில் தேவயானி பெயர்! Running News

இமிக்ரேஷன் பட்டியலில் தேவயானி பெயர்!

“தேவயானி தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார், எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் இமிக்ரேஷன் லிஸ்ட்டில் வைக்கப்படும்.” என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைய தேவயானிக்கு தடை விதித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. விசா மோசடியில் சிக்கிய இந்திய துணைத் தூதர் தேவயானி நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு தேவயானி இந்தியா திரும்பினார்.இந்நிலையில், தேவயானி கோப்ரகடேவின் பெயர் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களை கண்காணிக்கும் […]

January 12, 2014 admin
ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்! Running News

ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்!

சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு. பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு […]

January 12, 2014 admin
தோல் சுருக்கம் இல்லாமலிருக்க டிப்ஸ்! Running News

தோல் சுருக்கம் இல்லாமலிருக்க டிப்ஸ்!

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன. ஆயில் மசாஜ் பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி […]

January 11, 2014 admin
உடனடி செய்திகள்