32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2466)
ஏப்- 11-ல் கோச்சடையான் ரிலீஸாகி நாள்தோறும் 144 கோடி வசூலிக்குமா? Running News

ஏப்- 11-ல் கோச்சடையான் ரிலீஸாகி நாள்தோறும் 144 கோடி வசூலிக்குமா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் பத்து மொழிகளில் பல ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.இதையடுத்து இந்த படத்தின் பட்ஜெட் ஒரு 300 கோடி ரூபாய் என்று வைத்துக் […]

February 4, 2014 admin
கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer) By செல்லிஸ்ரீ Running News

கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer) By செல்லிஸ்ரீ

புற்றுநோயால் உலகம் முழுவதும் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாக தெரிகிறது. காரணம் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். இதையொட்டி கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் நாள் என்பதால் என் பங்களிப்பைப் படியுங்கள்.. பகிருங்கள்:. செல்லி : […]

February 4, 2014 admin
கரப்பான் பூச்சிகள் மூலம் புது வகை முயற்சி! Running News

கரப்பான் பூச்சிகள் மூலம் புது வகை முயற்சி!

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae) முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை […]

February 4, 2014 admin
தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் ! Running News

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் !

கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் தழுவிய பால் உற்பத்தி நிறுத்த போராட்டமும், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படி உற்பத்தியாளர்கள் போராட்டம் நீடித்தால் அடுத்த சில தினங்களில் நகர்ப்புறங்களில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் மாநிலம் முழுவதும் செயல்படும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் தயாரிப் பும் அடியோடு பாதிக்கும் என்பது கவலைக்குரிய […]

February 4, 2014 admin
உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் பண்ணை என்பது தெரியுமா! Running News

உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் பண்ணை என்பது தெரியுமா!

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம்.அதே சமயம்  வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் […]

February 3, 2014 admin
ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு Running News

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 24 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) – 10 சம்பளம்: மாதம் ரூ.21,00 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் […]

February 3, 2014 admin
மன நல மருத்துவராக சந்தானம் கலக்கும் “வாலிப ராஜா” Running News

மன நல மருத்துவராக சந்தானம் கலக்கும் “வாலிப ராஜா”

இந்த படத்தில் சந்தானம் தான் ‘வாலிப ராஜா’. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்சனைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி சேதுவின் இந்த ‘டபுள் ட்ராக்’ ஒன்லைன், சந்தானத்துக்கு ரொம்ப பிடிச்சுப் போகும். அவருக்கு உதவுவார். லோக்கல் காமெடியோட, புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்காராம். இது பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,”ஒரு துணி கடைக்கு […]

February 3, 2014 admin
விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் பாதுகாப்பானது! Running News

விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் பாதுகாப்பானது!

உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பட்டாணி, கீரை வகைகள் மற்றும் குள்ள வகையைச் சேர்ந்த கோதுமை போன்றவை இதுவரை அங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்ற சான்றிதழைப் பெற்றுள்ளதாக உயிர்மருத்துவவியல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் ரஷ்ய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ரஷ்ய ஆய்வாளரான […]

February 3, 2014 admin
உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..! Running News

உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..!

ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல். இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா […]

February 3, 2014 admin
தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள்! – விஜய்காந்த் பேச்சு Running News

தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள்! – விஜய்காந்த் பேச்சு

”தே மு.தி.க தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்பேன். ஆனால், தலைவர் என்ற முறையில் இதை மீறியும் முடிவு எடுக்கலாம். போன சட்டமன்ற தேர்தலில் தொண்டர்களை கேட்டுதான் கூட்டணிக்கு முடிவு எடுத்தேன். கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட்டது, அடிபட்டு, மிதிபட்டது போதும்.மக்களுடன்தான் கூட்டணி. தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தலைவர்கள் முடிவு எடுத்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”என்று விஜயகாந்த் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் தே.மு.தி.க. 9–வது […]

February 3, 2014 admin
உடனடி செய்திகள்