விநாடிக்கு 1000 HD திரைப்படங்கள் டவுன்லோட்! – ஆஸ்திரேலியா அசத்தல்!

விநாடிக்கு 1000 HD திரைப்படங்கள் டவுன்லோட்! – ஆஸ்திரேலியா அசத்தல்!

உலகம் முழுக்க வாழும் மக்கள் தொழில் முதல் பொழுதுபோக்கு வரை என ஒவ்வொன்றிற்கும் இணையத்தையே நம்பி உள்ளனர். அவர்களின் இணைய வேகத்தை அதிகரிக்க இதுவரை 2ஜி,3ஜி, 4ஜி சென்று தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் மொபைலிலிருந்து ஸ்மாட் டிவி வரை தற்போது அனைத்திற்கும் இணையம் தேவைப் படுகிறது. . என்னதான் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தாலும், டவரே கிடைப்பதில்லை என்பது இப்போது வரை பலரின் புலம்பல். இதற்காகவே ACT, Hathway எனப் பல பிராட்பேண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கில் ஜி.பி.க்களைக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நொடிக்கு 1000 HD திரைப் படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு இணைய வேகம் ஒன்று தயாராகி விட்டது என்பதே மகிழ்ச்சியான சேதியாக்கும்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மொனாஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் RMIT ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இதனை சாத்தியப்படுத்தி உள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அதிவேக இணையம் நொடிக்கு 44.2 டெரா பைட்ஸ் ( TBps) வேகத்தில் செயல்படும். இன்னும் தெளிவாக கூறினால் இந்த அதிவேக இணையத்தின் மூலம் விநாடிக்கு 1000 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும்.

பொதுவாக இணைய வேகத்திற்காக கண்ணாடி சிப் ஒன்றில் வழக்கமாக 8 லேசர்கள் பயன் படுத்துவார்கள் என்றும் ஆனால் இதில் லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் இந்த அதிவேக இன்டர்நெட் சாத்தியப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான் இருக்கும். இதனால், அங்கு இணைய சேவை மெதுவாக உள்ளதாக பயனர்களிடம் அதிகமான புகார்கள் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!