தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மேலும் ஐந்தாண்டு தடை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மேலும் ஐந்தாண்டு தடை!

ம் நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை பயங்கரவாத இயக்கம் என மத்திய அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் சென்னை, நீலகிரி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தீர்ப்பாயம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை சரியே என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967ல் 3வது பிரிவின் ஒன்று மற்றும் 3வது துணைப் பிரிவுகளின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது. மேலும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.’

‘2009ம் ஆண்டு எல்டிடிஇ அமைப்பு தோல்வி அடைந்து விட்ட போதும், அந்த அமைப்பு ’ஈழம்’ குறித்த கருத்தியலை கைவிடவில்லை. தொடர்ந்து ஈழத்திற்காக நிதி சேகரிப்பு மற்றும் பிரச்சாரத்தில் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் எல்டிடிஇ அமைப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வது என மத்திய அரசு உத்தரவிட்டு, அதனை இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!