கணேசாபுரம் – பட விமர்சனம் !

கணேசாபுரம் – பட விமர்சனம் !

ம் தமிழ் சினிமாவிலும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து. அவ்வப்போது கதை பின்னி வருவதுண்டு. அப்படி வரும் படங்களில் சொல்ல வந்ததை மறந்து போய் விடும் போக்கால் எடுபடாமல் போன சினிமா எத்தனையோ உண்டு.. அந்த வரிசையில் கணேசா புரம் என்னு படத்தில் திருடுவதை குலத்தொழிலாக கொண்ட சமூகத்தின் பின்னணியையும், அவர் களை திருடர்களாக மாற்றியவர்கள் யார்? அதனால் அவர்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன? என்பதை தைரியமாக காட்டி கைத்தட்டல் வாங்க முயற்சித்திருக்கிறார்கள்.

தான்தோன்றித்தனமாக் சுற்றித்திரியும் ரவுடி ஹீரோவை காதல் எப்படி மாற்றுகிறது, என்பதை திருடுவதை தொழிலாக கொண்ட சமூகத்தின் பின்னணியோடு சொல்லும் படம். அதாவது திருட்டு கூட்டங்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹீரோ சின்னாவும், அவரது நண்பர்களும் இஷ்டப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களுடைய வாழ்வில் காதல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, என்பது தான் படத்தின் கதை.

நாயகன் சின்னாவுக்கு இது தான் முதல் படமாம். அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்து இருக்கிறார். ஓரளவு நடிக்கத் தெரிந்த இந்த கேரக்டர் வாயின் ஏன் எப்போதும் பீடியை சொருகி விட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஹீரோவின் ப்ரண்டாக நடித்திருக்கும் தயாரிப் பாளர் காசிமாயனும் நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.அதற்காக பாடல் காட்சி எல்லாம் இவருக்காக திணித்திருப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. மற்றொரு நண்பராக நடித்திருக்கும் நடிகரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் கவனிக்க வைக்கிறார்.

பி.வாசு தன் கேமரா வழியே ஆக்‌ஷன் காட்சிகளை இயல்பாக காட்சிப்படுத்தியவர் அடுத்தடுத்து வரும் வில்லேஜ் சீன்களை விட்டேத்தியாக காட்டி சலிப்படையச் செய்கிறார்.

டைரக்ட் செய்திருக்கும் வீராங்கன் சின்னாவின் கதையை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் முன்னரே தமிழில் ரிலீசான சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அரவாண் போன்ற படங்களை பார்க்கவில்லை என்பதுதான் சோகம் (?!)

மொத்தத்தில் கணேசாபுரம் – அடுத்த ஸ்டாப்பிங்-கிலாவது அசத்துவார்கள் என்று நம்பலாம்!

மார்க் 2.25/5

 

error: Content is protected !!