தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்!
கோலிவுட்டில் நடந்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட்டு வரும் க்யூப் (Qube), யுஎஃப்ஓ (UFO) ஆகிய நிறுவனங்களின் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், திரையுலகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும், அதுவரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தார். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.இந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷால் , பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி .சி. ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தங்கள் தரப்பை விளக்கிய விஷால், “சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்கு களில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் பட அதிபர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கிறோம். டிஜிட்டல் சேவை அமைப்புகள் தியேட்டர்களில் வைத்துள்ள புரொஜக்டர்களுக்கு 10 வருடமாக தயாரிப்பாளர்கள் தவணை தொகையை செலுத்தி உள்ளோம்.



