கோயிலுக்கு போக தயாராகுங்க- ஜூன் 1 முதல் தரிசனம் செய்ய அனுமதி!

கோயிலுக்கு போக தயாராகுங்க- ஜூன் 1 முதல் தரிசனம் செய்ய அனுமதி!

ஆச்சு..ஐம்பது நாளுக்கு மேலாச்சு..  போன மார்ச் மாத இறுதியில் இருந்து இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.இதனிடையில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் மாத 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது பல தரப்பிலும் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது..

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு போய் முறையீடு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் கோவில்களைக் குறைவான பக்தர்களுடன் திறக்கலாமா என்பது குறித்து அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இணையதளம் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து அதைக் கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு கோவிலுக்கு 500 இ-பாஸ்கள் வீதம் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோயில் களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அறநிலையத்துறை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!