தைரியமாகச் சொல்… நீ மனிதன்தானா?- உலக சுகாதார மையத்திடம் ட்ரம்ப் கேள்வி!

தைரியமாகச் சொல்… நீ மனிதன்தானா?- உலக சுகாதார மையத்திடம் ட்ரம்ப் கேள்வி!

இன்று வரை உலக மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் குறித்தும் அந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய நேரத்தில் உரிய குரலில் எச்ச்சரிக்கை செய்யாமல தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார். அத்துடன் சீனாவில் இவ்வைரஸ் தாக்கம் தொடங்கி யதையும் அதன் பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம் சுமத்தி சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த சுமார்400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்திட வைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்  இன்னும் ஒரு மாத காலத்தில் தன் மீதான நம்பத்தகுந்த சான்றுகளை உலக சுகாதார நிறுவனம் சமர்பிக்க வேண்டும் என்றும் இனியும் இந்த உலக சுகாதார நிறுவனம் முக்கியமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிரந்தரமாக அதற்கான நிதி அளிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது எச்சரிக்கை விடுத்தார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் லட்சகணக்கானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அதை அடுத்து திட்டமிட்டே அமெரிக்காவை குறிவைத்து சீனாவின் வுகானில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனம் தனது செயல்பாட்டிற்காக வெட்கப்படவேண்டும். சீனாவின் ஆய்வகத்தில் எந்த வகையான ஆராய்ச்சி நடக்கிறது மற்றும் வைரஸ் மற்றும் அதன் மாதிரிகள் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதும் நமக்கு தெரியும். சீனா வைரசை கட்டுப்படுத்தாததால் இன்று உலகமே அவதிக்குள்ளாகி உள்ளது என்றேல்லாம் குற்றம்சாட்டினார்.

இதனிடையேதான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார நிறுவனம் விடியோ கான்பரன்சிங் முறையில் தனது பொது பேரவை கூட்டத்தை நடத்தி வரும் பொழுது பகிங்கர எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸிற்கு விடுத்துள்ளார். அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிப்பணம் அமெரிக்க மக்களின் நலனுக்கு பயன்படாத ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து போய்ச் சேருவதை நான் அனுமதிக்க முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் பொது பேரவைக் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நடவடிக்கைகளில் சீனா முறையாக நடந்து கொண்டது என்றும் தன் வசம் இருந்த எல்லாத் தகவல்களையும் உலக நாடுகளுக்கு தந்தது என்றும் குறிப்பிட்டார் அதுமட்டுமல்ல கரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக எல்லாத் தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கொரோனா வைரஸ் பரவுதல் முடிவுக்கு வந்ததும் இந்த வயது எங்கிருந்து வந்தது எப்படி பரவியது என்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனமே தன்னுடைய நிபுணர் குழு மூலமாக ஆய்வு நடத்தலாம் என்றும் சீனா அதிபர் தெரிவித்தார்.

அவருடைய கருத்தில் இருந்து சற்று சற்று வித்தியாச பட்ட உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் கடந்த கால அறிவியல் சம்பவங்களின் அடிப்படையில் நிபுணர் குழு ஒன்றின் மூலம் ஆய்வு நடத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் 62 நாடுகள் கையெழுத்திட்ட தீர்மானம் ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த தீர்மானத்தின்படி ‘கொரோனா வைரஸ் பாதிப்பில், உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாம் பெற்ற பாடங்கள் குறித்து, சுதந்திரமாக, விரிவாக மதிப்பிடப்பட வேண்டும். ‘ஏற்கனவே உள்ள நடைமுறைகள் அல்லது புதிய நடைமுறைகள் மூலம், இந்த வைரஸ் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என்ற யோசனை இருக்கிறது .இதை ஏற்று கொரோனா பரவல் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்

error: Content is protected !!