சென்னையில் இருந்து குஜராத்தின் கெவாதியாவிற்கு புதிய ரயில் சேவை!- வீடியோ!

சென்னையில் இருந்து  குஜராத்தின் கெவாதியாவிற்கு புதிய ரயில் சேவை!- வீடியோ!

சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கேவதியாவுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்ட்ரல் – கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடா்ந்து இந்த ரயில் சேவையை, பிரமதா் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக, காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.

அதன்படி இன்று முற்பகல் 11:12 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 2:52 மணிக்கு கேவதியாவை சென்றடையும். வரும் 20ஆம் தேதி முதல் வழக்கமான சேவைகள் தொடங்கவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குஜராத் மாநிலம் கேவதியா செல்லும் 8 ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சேவையைத் தொடங்கிவைத்து பிரதமர் பேசியது:

முதன்முதலில் கெவாடியாவை ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டபோது, குறுகிய காலத்தில் இதை செயல்படுத்த முடியாது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, கெவாடியாவுக்கு சரியான சாலை வசதி இல்லை. ரயில் போக்குவரத்தும் இல்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குக்கிராமம் போலவே கெவாடியாவும் இருந்தது.ஆனால், இன்று ஒரு சில ஆண்டுகளிலேயே கெவாடியா முற்றிலுமாக மாறியுள்ளது. சாலை வசதி மேம்படுத்தப்பட்டது. ரயில் சேவை விடப்பட்டுள்ளது.

நாட்டின் 8 பகுதிகளில் இருந்து கெவாடியாவுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் எந்த இடத்தின் சூழலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள ரயில்களின் விவரம்:

1. கெவாடியாவிலிருந்து – வாரணாசி செல்லும் மஹாமனா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09103/04)

2. தாதர் – கெவாடியா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (02927/28)

3. அகமதாபாத்திலிருந்து கெவாடியா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (09247/48)

4. கெவாடியா – எச்.நிஜாமுதீன், நிஜாமுதீன் – கெவாடியா சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை ரயில் (09145/46)

5. கெவாடியா – ரெவா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் ( 09105/06)

6. சென்னை – கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09119/20)

7. பிரதாப் நகர் – கெவாடியா தினசரி மின்சார ரயில் (09107/08)

8. கெவாடியா – பிரதாப் நகர் தினசரி மின்சார ரயில் (09109/10)

Related Posts

error: Content is protected !!