ஃபேமிலி மெம்பர்களை காப்பாத்த சட்டத்தை கையிலெடுத்துக்கலாம்! – சுப்ரீம் கோர்ட் க்ளியர் 

ஃபேமிலி மெம்பர்களை காப்பாத்த சட்டத்தை கையிலெடுத்துக்கலாம்! – சுப்ரீம் கோர்ட் க்ளியர்  

சில மாதங்களுக்கு முன்னால் ஹரியாணா காவல் துறை தலைவர் (டிஜிபி) கே.பி. சிங், “ஒரு பெண் பலாத்காரம் செய்யப் படுவதைப் பார்க் கும்போதோ அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சிப்பதைப் பார்க்கும்போதோ, அவர்களைப் பாதுகாக்கும்பொருட்டு சாதாரண மனிதன் குற்றவாளியைக் கொலை செய்யக்கூட உரிமை உள்ளது” எனத் தெரிவித்திருந்தது சலசலப்பை கிளப்பியது நினைவிருக்கிறதா? இந்நிலையில், “தன்னை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படும் போதும் அவர்களைப் பாதுகாக்க சட்டத்தை ஒருவர் தன் கையில் எடுத்துக் கொள்ளலாம்” என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இரண்டு நபர்களின் மேல்முறையீட்டு வழக்கில் இந்த முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது.

law

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, அண்டை வீட்டார் மற்றும் சிலரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தங்களது பெற்றோரைத் தாக்கியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்க மறுத்த விசாரணை நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் எனக் கூறி தீர்ப்பளித்தது.

பின்னர் மேல்முறையீட்டில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் ஐகோர்ட் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டி மேல்முறை யீடு செய்தனர்.

இவ்வழக்கை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கீர்த்தி சிங் ஆகியோரடங் கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தங்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் தாக்கப் படும்போது அவர்களைப் பாது காக்க சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது தவறில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதாவது இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மற்றவர்களைத் தாக்கியிருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஏன் தாக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள் என்பதையோ, அவர்களின் உடலில் இருக்கும் ஏராளமான தழும்புகளுக்கான காரணங்களையோ விவரிக்க காவல் துறை தரப்பு தவறிவிட்டது. தங்களின் பெற்றோர் தாக்கப்பட்டதை அவர்கள் பார்த்ததால்தான் அவர்கள் இருவரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்களைப் பாதுகாக்க முயன்றதால்தான் இருவரின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

error: Content is protected !!