June 6, 2023

குடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – குடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..!

1 . சுதந்திர தினம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளிய வந்த தினம் ஆகஸ்ட் 15 1947, அனால் இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் பிறந்த தினம் தான் இந்தியா குடியரசு தினம். இந்த இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் 26 January 1950 முதல் அமுலுக்கு வந்ததால் ஒவ்வொரு 26 ஜனவரி குடியரசு தினம்.

2 . கொடியை கீழ் இருந்து மேலே வரை ஏற்றி (Flag Hosting ) பின்பு பறக்க விடப்படும் பழக்கம் சுதந்திர தினத்தில் – அனால் குடியரசு தினம் அன்று கொடி மேலே இருக்கும் அதை ( Flag Unfurling ) மட்டும் செய்து பறக்க விடுவார்கள்.

3 சுதந்திர நாளில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றி வைப்பார் – குடியரசு தினத்தில் ராஜ்பாத்தில் பறக்கவிடப்படும்.

4 . 1947 முதல் 1950 இந்தியாவின் தலைமை பிரதமரிடம் மட்டும் இருந்தது. பின்பு குடியரசு இந்தியாவின் முதல் நபர் குடியரசு தலைவரான ஜனாதிபதி 26 ஜனவரி 1950 முதல் இந்தியா நாட்டின் தலைமை பொறுப்பின் முதல் நபர் ஆனார்.

5 . சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார். குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

JAI HIND