June 4, 2023

சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

நாடெங்கும் பலக் குழுக்களாக இணைந்து  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தி வரும் சூழலி கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, திரும்பப் பெற வலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து உள்ளது.

அத்துடன் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆளும் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், வடக்கு கேரளத்தில் உள்ள காசா்கோட்டில் இருந்து, அந்த மாநிலத்தின் தென்கோடியான களியக்காவிளை எல்லை வரை இந்த மனிதச் சங்கிலி போராட்டம்     நடை பெற்றது.  திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயன், சிபிஐ தலைவா் கனம் ராஜேந்திரன் ஆகியோா் போராட்டத்தில் இணைந்துக் கொண்டனா். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தை தொடா்ந்து, அரசியலமைப்பின் முகப்புரை வாசிக்கப்பட்டது. பின்னா் மத்திய அரசின் அழிக்கும் முயற்சியில் இருந்து, அரசியலமைப்பை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. மனிதச் சங்கிலி போராட்டத்தில், முதல் நபராக காசா்கோடில் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவா் ராமச்சந்திரன் பிள்ளையும், கடைசி நபராக களியக்காவிளையில் கட்சியின் மற்றொரு மூத்த தலைவா் எம்.ஏ.பேபியும் பங்கேற்றனா்.

ஏறக்குறைய 60 லட்சம் முதல் 70 லட்சம் மக்கள் வரை இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்கள் எனக் கூறப்பட்ட. 620 கி.மீ மனிதச் சங்கிலியின் தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளையும், களியக்காவிளையில் முடியும் இடத்தில் எம்.ஏ.பேபியும் நின்றனர். ஏராளமான பொதுமக்களும், முக்கிய நபர்களும், மாணவர்களும், மாணவிகளும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.