பாரத ஸ்டேட் வங்கி புரொபஷனரி அலுவலர் பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி:
Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்)
மொத்த காலியிடங்கள்:
541
சம்பளம்:
மாதம் ரூ.48,480 – 85,920
தகுதி:
30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
1.4.2025 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதாவது 1.4.2004-க்கு பின்போ,2.4.1995-க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மற்றும் தேர்வு மையம்:
முதல் நிலைத்தேர்வு ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் – சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.
முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:
அக்டோர், நவம்பர் 2025
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://sbi. co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
14.7.2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.