3BHK- விமர்சனம்!

3BHK- விமர்சனம்!

மூன்று படுக்கையறைகள், ஒரு ஹால் மற்றும் ஒரு சமையலறை உள்ள ஒரு வீட்டுவசதி அல்லது அடுக்குமாடி குடியிருப்பைக் குறிக்கும் 3BHK படம் பார்க்கும் போது எஸ்.ராமகிருஷ்ணன் எப்போதோ சொன்னஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. அதிலும் நகரவாசிகள் வாடகைக்கு வீடு தேடி அலைந்து பட்ட துயரங்களால் எப்படியாவது ஒரு வீட்டை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த வீடு வாய்த்துவிடுவதில்லை. பலர் வாடகை வீட்டிலே வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடுகிறார்கள். ஆண்கள் வாழ்வதற்கு ஒரு அறை போதும்; பெண்களுக்கோ வீடு தேவை.ஒரு வீடு கட்டப்படுவது எளிய விஷயமில்லை. ஆயிரம் பிரச்சினைகள். சிக்கல்கள். கட்டி முடிக்கப்படாத வீடு, பிறந்த குழந்தையைப் போலத்தான் இருக்கும். வண்ணம் பூசி மின்சார வசதிகள் செய்து கதவும் ஜன்னலும் பொருத்தி முழு வீடாகும்போது அதைக் கட்டிய குடும்பம் ஊரார் வந்து பார்ப்பதற்கு முன்பு தனியே ஒருமுறை சொந்த வீட்டின் சுவர்களை ஆசை தீர தடவிப் பார்த்துக் கண்ணீர்விட்டுக்கொள்வார்கள்.என்று சொன்னதை மனதில் உள்வாங்கி இப்போதைய இளசுகளின் பாணியில் அந்த கால பாலும்கேந்திராவின் வீடு படத்தை வெறொரு பரிமாணத்தில் வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு பக்கா சினிமாவுக்கான ஃபார்மேட்டில் குடும்பத் தலைவன், மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என்ற லிமிட்டில் ஒரு குடும்பம், வழக்கம் போல் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை சமாளித்து ஓட்டி வரும் தலை சரத்குமார் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே சமயம், தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்கு செலவு செய்கிறார்.அந்த நேரத்தில் திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளாகி இதய தமனிகளில் இரண்டு அடைப்புகள் இருந்ததால் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணமும் காணாமல் போகிறது. ஆனாலும்ம் விடாமல் மறுபடியும் முயற்சி செய்து வங்கி கடன் பெற்று வீட்டை வாங்க முனைப்பில் இருக்கும்பொழுது மகன் சித்தார்த் குறைந்த மதிப்பெண்ணோடு பாஸ் செய்த நிலையில், அவரை இன்ஜினியரிங் சேர்ப்பதற்காக அந்தப் பணமும் காலியாகிறது. இதற்கடுத்து வீடு வாங்குவது பற்றிய சிந்தனையே இல்லாமல் விட்டு விடுகிறார் சரத்குமார். மகன் சித்தார்த் படித்து முடித்து வெளியில் வந்து ஐடி நிறுவனத்தில் வேலை சேர்ந்து தான் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் இறங்குகிறார். அவருக்கு எல்லாவிதமான ஆதரவையும் தருகிறார் சரத்குமார். அதனால் மறுபடியும் லோன் போட்டு வீடு வாங்க நினைக்கும் நேரத்தில் மகளது திருமணம் நடைபெற வேண்டிய கட்டாயம் வர, இப்பொழுதும் அந்த வீட்டுக் கனவு பணால் ஆகிறது. இப்படியாக போன இந்த நால்வர்கள் வீடு வாங்கினார்களா…? இல்லையா…? என்பதுதான் இந்த 3 BHK படத்தின் கதை.

குடும்பத் தலைவனாக வாசுதேவன் என்ற ரோலில் நடித்திருக்கும் சரத்குமார், வெயிட்டான கேரக்டர் என்று ரசிகன் நம்ப வேண்டும் என்பதற்காகவே அளவாக நடித்திருப்பது பாராட்டுக்குரியதுதான்.ஆனாலும் படம் முழுவதுமே ஒருவித இறுக்கத்துடன் நடித்திருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. சொந்த வீடு, பொருளாதார முன்னேற்றம் போன்றவை குறித்து யோசிக்கும் அனைவரும் இப்படி தான் சோகமாகவும், அமைதியாகவும் இருப்பார்கள், என்ற மாயையை உருவாக்கியிருக்கும் சரத்குமாரின் நடிப்பு சில இடங்களில் சலிப்படைய வைக்கிறது.ஆனாலும் இப்படத்தின் ஹீரோவே ஐயாடா என்று நிரூபித்து விடுகிறார்

குடும்பத்தலைவியாக வரும் தேவயானிக்கு அப்பா பிள்ளைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கதாபாத்திரம்தான்.

மகனாக வரும் சித்தார்த் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சுமந்து இருக்கிறார். பிளஸ் டூ படிக்கும் மாணவர். அதற்கு பிறகு கல்லூரி மாணவர். அதற்கு பிறகு வேலை பார்க்கும் இளைஞர். பின்பு ஒரு பொறுப்பான கணவன் என்று பல்வேறு பரிணாமங்களை காண்பித்திருக்கிறார். அந்தந்த ஏஜூக்குரிய அவருடைய ஒப்பனையும், அவருடைய உடல், உடை, நடை, பாவனையும் மாறி இருப்பது கவனிக்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

சரத்குமார் மகளாக வரும் மீத்தா தன் திருமண வாழ்க்கை பங்கமாகிப் போய்விட்டது என்று சொல்லி கதறும் போது அரங்கு அமைதியாகி விடுகிறது ஆச்சரியம்.

சித்தார்த் ஜோடியாக வரும் சைத்ரா கேரக்டர் சர்ப்ரைஸ் .கோடம்பாக்கத்தின் செட்பிராப்பர்டி யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார் என்பதைச் சொன்னால் நம்போணும்.

மியூசிக் டைரக்டர் அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைப்பதோடு, கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது.

கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வியல், கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் என அனைத்தையும் மனதுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

லோ இன்கம் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.ஒரு வீடு மட்டுமே ஒரு மனிதனுக்கு, ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு நிறைவை தராது, அந்த வீடு வாங்குவதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்காக அடுத்த 25 வருடங்கள் அவன் நாயாய் உழைக்க வேண்டும். அந்த உழைப்பில் சிறிது சேதாரம் ஆனாலும் மொத்தமும் கையை விட்டு போய்விடும் என்பதை சுட்டிக்காட்டாது பெருங்குறை

CLOSE
CLOSE
error: Content is protected !!