ஸ்டேட் பேங்க்குடன் இணைந்து ஸ்பீட் பே! – பி எஸ் என் எல் பிளான்

ஸ்டேட் பேங்க்குடன் இணைந்து ஸ்பீட் பே! – பி எஸ் என் எல் பிளான்

பிஎஸ்என்எல், ஸ்பீட் பே என்ற சேவையை தொடங்கி இருந்தது. இது, மொபைல் ஃபோன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனத்தின் எம்-பைசா, ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் மணி போன்ற சேவைகளைப் போலவே இயங்கக்கூடியது. தற்போது, இந்த சேவையை மேம்படுத்தும் விதமாக எஸ்பிஐ வங்கியோடு இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 bsnl may 25

இதற்காக சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகத்தோடும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிஎஸ்என்எல்-லின் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.அரசு வழங்கும் மானியம் தற்போது வங்கிக் கணக்கிலேயே கிடைக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிஎஸ்என்எல்-லின் ஸ்பீட் பே கணக்கில் அரசின் மானியங்கள் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி தற்போது 13000 கிளைகளைக் கொண்டுள்ளது. அதேபோல, பிஎஸ்என்எல் நிறுவனம் 8.48 வயர்லெஸ் வாடிக்கையாளர்களையும், 1.47 கோடி Wireline வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.எனவே, இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக அதிக வருவாயை லாபமாக ஈட்ட முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts