அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் திமிர்தனமில்லையா : சோனியா காந்தி காட்டம்!!

அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் திமிர்தனமில்லையா :  சோனியா காந்தி  காட்டம்!!

‘மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டுவதை அரசு தேர்வு செய்திருக்கிறது’ அதிலும் உங்கள் அரசாங்கம் தொடர்ந்து விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவது திமிர்த்தனமான செயல்”என்றும் என்று அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்து பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியிருக்கிறார்.

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசு மக்களின் துயரங்களையும், துன்பங்களையும் லாபம் ஈட்டத் தேர்ந்தெடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடிதத்தில், எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறவும், மக்களுக்கு நன்மைகளை வழங்கவும் பிரதமரை வலியுறுத்தினார் . ” இந்த அதிகரிப்புகளைத் திரு ம்பப்பெற்று, நடுத்தர மற்றும் சம்பள பெறும் வர்க்கம் , விவசாயிகள் , ஏழைகள் மற்றும் சக குடிமக்களுக்கு நன்மைகளை செய்யவேண்டும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் ,” என்று அவர் எழுதி யிருக்கிறார்.

மேலும் “எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவது குறித்து ஒவ்வொரு குடிமகனும் அடையும் வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் தெரிவிக்கவே நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். ஒருபுறம், வேலைகள், ஊதியங்கள் மற்றும் வீட்டு வருமானங்கள் போன்றவை பெருமளவில் குறைந்துவிட்டதை இந்தியா கண்டிருக்கிறது. “என்று அவர் கூறியிருக்கிறார்.

சனிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .97 ஆக உயர்ந்தது, டீசல் விலையும் ரூ .88 ஐ தாண்டியது. இது விலைவாசி உயர்வுக்கான 12 வது நாளாகும், மேலும் எண்ணெய் நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டில் தினசரி அடிப்படையில் கட்டணங்களை திருத்தத் தொடங்கியதிலிருந்து, இது மிகப்பெரிய தினசரி அதிகரிப்பு ஆகும். நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100 ஐ தாண்டிள்ளதாகவும், டீசலின் விலை அதற்கு இணையாக உயர்ந்து வருவது மில்லியன் கணக்கான விவசாயிகளின் துயரங்களை அதிகரித்துள்ளது என்றும் அவர் தனது கடிதத்தில் கூறினார்.

“பெரும்பாலான குடிமக்களை அதிர்ச்சியடைய செய்வது என்னவென்றால், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் போதிலும் இந்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உண்மையான சூழலை சொல்வதானால், கச்சா எண்ணெய் விலை காங்கிரஸ் யுபிஏ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட பாதியாக இருக்கிறது. எனவே, உங்கள் அரசாங்கம் தொடர்ந்து விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவது திமிர்த்தனமான செயல்”என்றும் அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!