பிப்ரவரி 26ம் தேதி வர்த்தகர்கள் நாடு தழுவிய அளவில் பந்த்!

பிப்ரவரி 26ம் தேதி வர்த்தகர்கள் நாடு தழுவிய அளவில் பந்த்!

ஜிஎஸ்டிக்கு எதிராக பிப்ரவரி 26ம் தேதி வர்த்தகர்கள் நாடு தழுவிய அளவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்களும் பந்து நடத்த உள்ளனர். இதனால் அன்றைய தினம் 40 லட்சம் லாரிகள் ஓடாது எனக் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து அனைத்திந்திய டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நல சங்கம் (ஏ.ஐ.டி.டபிள்யூ. ஏ) தேசியத் தலைவர் மகேந்திர ஆர்யா கூறுகையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இந்த பந்தில் பங்கேற்கும் ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ முடிவுக்கு மாநில அளவிலான லாரிகள் சங்கங்கள் உறுதி அளித்துள்ளன. அந்த ஒரு நாளுக்கு புக்கிங்குகள் நடைபெறாது. அனைத்து நிறுவனங்களும் அன்றைய தினத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து குடோன்களிலும் போராட்ட பேனர்கள் வைக்கப்படும். அன்றை தினத்தில் சரக்குகளை லோட் செய்யவோ, புக் செய்யவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.,’ என்றார்.

ஜிஎஸ்டி சட்டம் 129ன் படி காலாவதியான அல்லது தவறான பில்லோடு சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு வரி மதிப்பில் 200 சதவீதம் அல்லது இன்வாய்ஸ் தொகையின் 100 சதவீத மதிப்புக்கு அபராதம் விதிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் இது போன்ற தவறுகள் நடக்கும் போது, இந்த அதிக அபராதம் பெரும் சுமையாக இருப்பதாக ஆரியா தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தில் ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ, அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், ஜிஎஸ்டிக்கு கீழ் இ-வே பில், நாடு முழுவதும் பெட்ரோல் விலையில் மாறுபாடு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் கூறப்பட்டு உள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26ம் தேதி பாரத் பந்தில் லாரி சங்கங்கள் பங்கேற்க உள்ளன. இதனால், அன்றைய தினம் நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!