உலகை சுற்றி முடித்தது முதல் சோலார் ஃபிளைட்!

உலகை சுற்றி முடித்தது முதல் சோலார் ஃபிளைட்!

ஒரு துளி பெட்ரோல் இல்லாமல் உலகத்தையே சுற்றி வந்த விமானம் முந்தா நேற்று அபுதாபியை வந்தடைந்தது. உலகத்தின் முதல் சூரிய விமானம் போன வருடம் மார்ச் மாதம் பறக்க தொடங்கியது. இந்த விமானம் 16 ஸ்டாப்களை கொண்டு நேற்று கடைசி சுற்றாக அபுதாபியில் வெற்றிகரமாக தரை இறங்கியது. பெர்ட்டான்ட் பிக்காட் மற்றும் ஆன்ட்ரே போஷ்பெர்க் இருவரும் தான் இந்த விமானத்தின் பைலட்கள்.

ravi jy 27

17,248 சூரிய தகடுகளை கொண்ட இந்த விமானத்தின் இறக்கை ஜம்போ விமானத்தின் அளவுக்கு விரிந்து சூர்ய சக்தியை பெற்று பகல் மட்டும் அல்ல இரவும் இந்த விமானம் பறக்க உதவி புரிந்தது. இந்த விமானம் மஹிந்தரா போலேரோ அளவுக்கு கனம் வாய்ந்தது. இதன் இறக்கை மட்டும் 236 அடிகள். இந்த விமானம் முதலில் பல நாடுகளை கடக்கும் போது ஜப்பானில் இருந்து அமெரிக்கா ஹவாய்க்கு செல்லும் போது இதன் பேட்டரிகள் சேதம் அடைந்ததால் 9 மாதங்கள் இதன் பிராஜக்ட் நிறுத்தப்பட்டு திரும்பவும் கிளம்பியது பலருக்கு நினைவு இருக்கலாம்

இந்த விமானம் இந்தியாவில் கூட தரை இறங்கியது தெரியுமில்லையா?. இதன் விமானிகள் தினமும் 12 மணி நேரம் தொடர்ந்து ஒருவர் ஓட்ட இன்னொருவர் ரெஸ்ட் எடுக்க என தொடர்ந்து 24 மணி நேர இயக்கியது சாதனை. அது மட்டுமல்ல அட்லான்டிக் பெருங்கடலை 70 மணி நேரத்தில் கடந்த உலகத்தின் முதல் சோலார் விமானமும் இது தான்.

இந்தியாவில் இறங்கிய போது எடுத்த வீடியோ இதோ:

40,000 Kilometers without a single drop of FUEL,Sun-powered plane finishes round-the-world trip as pilots argue clean flights will become the norm