June 4, 2023

” மனுதர்மமும் மக்கி போன மண்ணாங்கட்டி எண்ணங்களும் “

Today Sunday Thathupithu – இன்று சண்டே என்பதால் தத்து பித்து – இன்றைய தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது – ” மனுதர்மமும் மக்கி போன மண்ணாங்கட்டி எண்ணங்களும் ” மனு நூல் கூறும் தர்மம்: மனிதன் வாழ்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வான். அந்த விதிமுறைகள் தேவையானது தான்‌.மனு நூல் கூறும் தர்மம்: அப்படி மனிதனுக்கு மனிதனே சொல்லும் அறக் கருத்துகள் நிறைய உள்ளன. அவ்வாறு ஒரு விதியை பிரம்மனே வழங்கியதாக நம்பப்படுவது மனு. அந்த மனு தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழ்வின் புரிதலை வகுத்த பிரம்மா – அதை வகுத்து பல்லாயிர ஆண்டுகளாகிட்டன. கடவுளே இல்லை என்றும் கூறும் தற்குறிகள் தான் இந்த மாதிரி டயமண்ட் முத்து மற்றும் பலர் – வளவர்கள் கூட இதைதீர ஆராயாமல் புத்தி கூறுவது தான் எத்தனை மடமைத்தனம் என்பது தெளிவு பெறுகிறது.

பல்லாயிர வருடங்கள் வேண்டாம் – உன் அம்மா உன் பாட்டி வளர்ந்த விதத்தின் பத்து சதவிகித பார்முலாபடி உன் மகள் வளர்க்கப்பட்டாளா அல்லது அப்படி ரெண்டு ஜெனரேஷன் முன்பு அளவுக்கு வளர தான் அவள் விரும்புவாளா? இது தான் உண்மை. எத்தனை ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்வியலை வகுத்த ஒரு சாஸ்தாரத்தை வைத்து அணைத்து பெண்களையும் இன்றைய பிறக்கட்டில் அடைப்பது அதுவும் கடவுள் இல்லை – இந்து மதம் திருடர்கள் மதம் என்று ஓங்கி அடித்து கூறும் பக்கோடாவாதிகள் குமுறுவது தான் மண்ணாங்கட்டித்தனம்.

சரி ரவி அதை நாங்கள் பின்பற்றவில்லை ஆயினும் மனு தர்மத்தில் கூறியது சரியாய் தவறா என கேட்டால் என்னுடைய பதில் இது தான் – ஆறு சுவை உணவை ஆரம்பத்தில் இருந்து உண்டவனுக்கு தெரியும் அது அறுசுவை உணவை இல்லையா என்று – அதை விட்டு நுனியில் வைக்கும் உப்பையோ , இஞ்சி துவையலையோ. அல்லது ஊறுகாயை உண்டு இது கரிக்கும், இது காரம் இது புளிக்கும் என்று கூறும் மடமை தான் இந்த பீத்தல் ஆட்கள் நடுவுல உள்ள உப்பை உண்டு சீ சீ இந்த அறுசுவை கரிக்கும் என்பது போல –

திருமாவளவன் என்னுடைய நண்பர் – பல சந்தர்ப்பத்தில் அவருடன் படத்தில் முதன் முதலாய் நடிக்க வைத்து ரிலீஸ் செய்த வகையில் அவரை பகடைக்காயாய் உபயோகின்றனர் என்று கண்டிக்கிறேன். ஒகே அவர் சொன்ன மனு தர்ம உருவில் ஒன்றை சொன்னவர் இதை உணரட்டும்.

மனுஸ்ம்ரிதி பன்னிரண்டு அத்தியாங்களை கொண்டது அதில் 2694 ஸ்லோகங்கள் உள்ளது – அதில் அவர் கூறும் ஒன்பதாவது அத்தியாயம் அவர் முழுதாக கூற வில்லை – வம்பர்கள் கூற்று போல Read between the Lines தான் அந்த உவமானம். அதிகம் தேவையில்லை 497 ஆம் பக்கம் உள்ள ஒரு விஷயத்தை கூறியது பல அடுத்த இரண்டு பக்கத்தில் உள்ள 500 பக்கத்தில் பாரா மூன்றில் உள்ள பத்தாவது அத்தியாயத்தை கொஞ்சம் படித்தால் பெண்களை எவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவாக புரிகிறது இதை தான் திருவள்ளுவரும் கூறுவார். ஆனால் இதை எதோ மண்டப கவிஞர்கள் இத்து போன பரிசுக்காக கூறியது அல்ல – ஒவ்வொரு இல்லத்தில் இருக்கும் பெண் அரசி போல் உள்ளவள் என்பதை தான் நாம் இன்று வரை இல்லத்தரசி என்று கூறுகிறோம்.

எதை ஆராய்ச்சி செய்தலும் குருடன் யானையை தடவி பார்த்தது போல இல்லாமல் ஆராய்ந்து பேசுங்கள் குறைகளை சுட்டி காட்டுங்கள் மற்றும் அந்த குறைகள் நடைமுறையில் உள்ளதா என்பதை தெளிந்து உரை ஆற்றுங்கள் – உங்களுக்கு அரசியல் செய்ய ஆயிரம் காரணம் உள்ளமையால் கடவுளை கடவுள் போல போற்றி வணங்கும் பெண்களை கொச்சை படுத்துவது முதல் தம் இல்லத்தில் இருந்து பெண்களை கொச்சை படுத்துவதற்கு சமம். மறந்தும் செய்யாதீர்கள்.