“ஆக்சி பல்ஸ் மீட்டர்” – கொரோனாவை கண்டறியும் உபகரணம்!

“ஆக்சி பல்ஸ் மீட்டர்” – கொரோனாவை கண்டறியும் உபகரணம்!

இந்த கொரோனா அனைவரின் வாழ்விலும் வரும் என்று உணர்ந்து கொண்ட தருணம்……..இதை நீங்கள் கவனத்துடன் கையாண்டால் கூட சில நேரம் சரியின்மை காரணத்தினால் உங்களுக்கு, எனக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது விதியாகி போனது. சரி – பலர் இந்த கொரோனவை பல மாதிரி எடுத்துரைத்தாலும் – பழைய சிம்ப்டன்ஸ் மாதிரி – வறட்டு இருமல் – காய்ச்சல், மூச்சு விட சிரமம் என இருந்த நிலை மாறி இப்போது வேறு மாதிரி சிம்ப்டன்ஸ் வந்தாலும் இறுதியில் இது தாக்கும் இடம் உங்களின் நுரையீரல் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நுரையீரலை இந்த நோய்கிருமி தேர்ந்தேடுக்க காரணம் – ஈரப்பசை உள்ள இடம் என்பதால். இதனால் உங்களின் வயிற்றில் தங்க முடியாது ஏன் என்றால் வயிற்றில் இருக்கும் அமிலம் மற்றும் தட்ப வெட்பம். மற்றபடி இது மூளைக்குள்ளும் செல்ல முடியாது என்பது இன்னொரு காரணம்.இந்த மாதிரி நுரையீரல் உள்ளே உட்கார்ந்து காற்று குழல்களை அடைத்து மரணத்தை அடைய வைக்கும் இந்த நோயை கண்டறிய பல வழிகள் இருந்தாலும் முக்கியமான ஒரு உபகரணத்தை நீங்கள் வாங்கி வைத்து கொண்டால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் ஓரளவுக்கு காப்பாற்ற அல்லது சரியான நேரத்தில் சிகிச்சை செய்ய முடியும் என்பது உண்மை. இந்த உபகரணம் பல பேரை கொண்டிருந்தாலும் இதை “ஆக்சி பல்ஸ் மீட்டர்” என கூறுவார். இந்த உபகரணத்தை விலை 750 முதல் 1200 வரையே. இந்த உபகரணம் ரொம்ப ஈசியாக பயன்படுத்த முடியும்.

இந்த டிவைஸை ஆன் செய்து ஜஸ்ட் பெரு விரலை வைத்தால் போதும் உடனே SPo2 ஒரு பக்கமும் pulse இன்னொரு பக்கமும் இருக்கும். இதை விரலில் வைத்தால் உங்கள் பிராணவாயு நிலைமை கிட்ட தட்ட 98 இருந்தால் மிகவும் பக்கா ஆரோக்யம் – 95 இருந்தால் ஓகே – கொஞ்சம் மூச்சு பயிற்சி செய்தல் நல்லது – 90 க்கு கீழ் இருந்தால் தயவு செய்து நீங்கள் டாக்டரை காண வேண்டும். என் என்றால் இந்த கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக பிராண வாயுவை குறைக்க வைக்கும். 80 – 85 வந்தால் கண்டிப்பாய் உங்களுக்கு சாச்சுரேஷன் குறைந்து வெண்டிலேட்டர் என்னும் இயற்கை சுவாசம் தேவைப்படும் என்பது பேசிக் அனலைசிஸ். அதனால் எவ்ளோ செலவில் இதையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

இது தான் என்னோட ஆக்சிஜன் லெவல் 98 / பல்ஸ் 76 ஒரு முப்பது வயது இளைஞனுக்கு இருக்க வேண்டிய ரீடிங் ஆகும். அதனால் இதை வாங்கி வைத்து கொள்வது உங்களின் நிலையை நீங்களே அறிய முடியும் அதிசயம்.  உங்களை அப்படி ஒரு நிலைமை வந்து மருத்துவமனைக்கு கூடி சென்றால் முதன் முதலில் மருத்துவமனையில் இந்த ஆக்சி மீட்டரை வைத்து தான் உங்களை பரிசோதிப்பார்கள்.

error: Content is protected !!