June 4, 2023

காசாவில் நேற்று வீழ்ந்த கட்டிடங்களால் ஒரு உயிரிழப்புக் கூட கிடையாது! எப்படி?

காசாவில் இருக்கும் அல் ஜசீராவின் அலுவலகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தாக்கி இருக்கிறது. கட்டிடம் முழுதுமாக விழுந்து நொறுங்கியது. மேற்கத்திய மீடியா பற்றியோ அல்லது எந்த ஒரு வெளிநாட்டு மீடியா பற்றியோ இஸ்ரேல் கவலைப்படுவதே இல்லை, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று இஸ்ரேலிய அரசியல்வாதிகள் நினைத்ததே இல்லை. அல் ஜசீரா கட்டிடம் அடித்து நொறுக்கப்பட்டதும், அதில் உயிரிழப்புகள் எத்தனை தெரியுமா? ஒன்றுமே இல்லை! அது எப்படி?

ஒரு கட்டிடத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்தக் கட்டிடத்திற்கு முன்னமே தொலைபேசியில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை இத்தனை மணிக்கு உங்கள் கட்டிடத்தை குண்டு வீசித் தகர்க்கப் போகிறோம் என்று செய்தியைச் சொல்லி விடுகிறது.

அந்த குறிப்பிட்ட நேரத்தின் 10 நிமிடத்திற்கு முன், roof tappings எனப்படும் சிறிய ரக குண்டினை அந்த கட்டிடத்தின் மீது வீசும். அந்த குண்டு கட்டிடத்தை சேதப்படுத்தாது, வெறும் அதிர்வினை மட்டும் ஏற்படுத்தும். காரணம், அறிவிப்பினை மீறி அந்தக் கட்டிடத்தில் எவரேனும் இருந்தால் உடனே வெளியேற வேண்டும் எனக் கொடுக்கும் எச்சரிக்கை அது. கட்டிடத்தை மட்டும் இடித்து இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது? அதற்கு என்ன லாபம்?

ஒரு கட்டிடத்தை தகர்க்க அதிகபட்சம் இஸ்ரேல் ஒரு மணி நேரம் மட்டுமே கொடுக்கும். கட்டிடத்தில் பயங்கரவாதிகள் செய்த உட்கட்டமைப்பு வசதிகள் அடித்து நொறுக்கப்படும். அதனால் பயங்கரவாதிகளுக்கு பொருள் இழப்பு ஏற்படும். மீண்டும் அதே கட்டமைப்பினை உருவாக்க பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகலாம்!அல்-ஜசீரா கட்டிடம் இடித்து நொறுக்கப்பட்டதை அல்-ஜசீராவே வீடியோ பதிவு செய்து வெளியிட்டதை கவனிக்கவும்.

அப்படியானால் பள்ளி குழந்தைகள், பெண்கள் இறப்பது எவ்வாறு நடக்கிறது? ஹமாஸ் 24 மணிநேரத்தில் 1500 குண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் நகரங்களை நோக்கி வீசியிருக்கிறது. அவ்வாறு வீசப்பட்ட ராக்கெட்டுகள் சில குறுகிய தூரத்திலேயே விழுந்து சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் பெண்கள், குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களின் பின்னிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். மேலும், இஸ்ரேல் எச்சரிக்கை கொடுக்கும் கட்டிடத்தில் இருந்து சில சமயங்களில் ஹமாஸ் மக்களை வெளியேற விடுவதில்லை. அதுவும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம்.

இஸ்ரேல் அடிவாங்குவது இங்கேயேதான். பெண்கள் குழந்தைகள் இறப்பது ஹமாஸிற்கு சர்வதேச அளவில் கவனம் பெற உதவுகிறது. அதனால் அப்பாவிப் பொதுமக்கள் இறப்பதை குறித்து ஹமாஸ் கவலைப்படுவதில்லை. இப்பொழுது அல் ஜசீரா கட்டிடம் நொறுக்கப்பட்டதை வைத்து மேற்கத்திய மீடியாக்கள் கருத்துரிமை நசுக்கப்படுகிறது, ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என்று ஓலமிடும், இஸ்ரேல் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படப் போவதில்லை.

இந்தியா மேற்கத்திய மீடியா மற்றும் ஆங்கில மீடியாக்களைப் புறக்கணித்து, தனக்கு எது சரி என்று படுகிறதோ அதன் வழியில் முழுமையாக எப்போது செல்கிறதோ, அப்போது நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும்! மீடியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான்,

சர்வதேச மற்றும் இந்திய ஆங்கில மீடியாக்கள் ஒரு narrative முடிவு செய்ய, அதுவே பிராந்திய மீடியாக்களில் செய்தியாகி, மக்களிடம் கருத்துருவாக்கம் ஏற்படுகிறது. இதிலிருந்து இந்தியா மீள வேண்டும். நன்றி