ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்!

ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்!

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து  அமைச்சுக் களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த அமைச்சுப்பொறுப்பில் மஹிந்த ராஜபக்ஷ, – நாமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் மகன்), சமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் சகோதரர்), சசிந்திர ராஜபக்ஷ (சமல் ராஜபக்ஷவின் மகன் – ராஜாங்க அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி யின் மகன் நிபுண ரணவக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெற்ற அமைச்சர்கள் & இலாகா விபரங்கள் இதோ:

01. கோட்டபாய ராஜபக்ஷ -பாதுகாப்பு அமைச்சு

02. மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

03. நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சு

04. பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் – கல்வி அமைச்சர்

05. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சு

06 தினேஷ் குணவர்தன – வெளிவிவகார அமைச்சு

07 டக்ளஸ் தேவநாந்தா -கடற் தொழில் துறை அமைச்சர்

08. காமினி லொக்குகே – போக்குவரத்துறை அமைச்சர்

09. பந்துல குணவர்தன- வர்த்தகத்துறை

10. சீ பி ரத்நாயக்க – வன விலங்கு மற்றும் வன பாதுகாப்பு

11. ஜனக்க பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

12. கெஹெலிய ரம்புக்வெல – வெகுசன ஊடகம்

13. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சு

14. டளஸ் அழகப்பெரும – மின்சக்தித்துறை

15. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்

16. விமல் வீரவங்ச – கைத்தொழில்துறை

17. மஹிந்த அமரவீர – சுற்றாடல்

18. எஸ் எம் சந்திரசேன – காணி விடயம் தொடர்பான

19. மஹிந்தாநந்த அளுத்கமகே – கமத் தொழில் அமைச்சு

20. வாசுதேவ நானயக்கார – நீர்வளங்கள் துறை

21. உதய பிரபாத் கம்பன்பில- எரிசக்தி துறை

22. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத்துறை

23. பிரசன்ன ரணத்துங்க – சுற்றுலாத்துறை

24. ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

25. நாமல் ராஜபக்ஷ – இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை

26. அலி சப்ரி – நீதித்துறை

Related Posts

error: Content is protected !!