’ரெட் சாண்டல் வுட்’ – விமர்சனம்
நாளிதழ்களில் அடிக்கடி இடம் பெறும் வாசகம் செம்மரம்.. சந்தையில் செம்மரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதனால் அதன் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. சந்தன மரத்திற்கும் செம்மரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், அதன் எடையும், நறுமணமும் தான்! அதிக பணமதிப்புள்ள மரமாக இருந்த சந்தன மரத்தை கடந்த சில ஆண்டுகளில் செம்மரம் சந்தையில் முந்திவிட்டது.அதனால் செம்மரங்கள் ரகசியமாக கடந்த 15 ஆண்டுகளாக வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திரா அரசு பல முயற்சிகளை எடுத்தும், மரம் வெட்டுபவர்களை எண்கௌண்டர் செய்து 25க்கும் மேற்பட்டவர்களை கொன்றும், கடத்தல் கும்பல்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள், புரோக்கள் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தும் செம்மர கடத்தலை தடுக்க முடியவில்லை. இந்த செம்மரக் கடத்தல் பின்னணியுடன் புஷ்பா என்றொரு தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட அடித்த நிலையில் செம்மரம் என்றால் என்ன?, அதற்கு ஏன் இவ்வளவு பெரிய வியாபாரம்?, என்ற விபரங்களை சொல்லிஇந்த செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் வியாபாரம் மற்றும் அரசியலால் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் தங்கள் பாணியில் போதிய அழுத்தமில்லாமல் சொல்லி இருப்பதே ரெட் சாண்டல் வுட் படம்.
அதாவது ஹீரோ வெற்றி காணாமல் போன தனது நண்பனை தேடி திருப்பதி செல்கிறான். போன இடத்தில் எதிர்ப்பாராத விதமாக செம்மரக்கடத்தலுக்காக பொய் குற்றம் சாட்டப்பட்டு திருப்பதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறான். அந்த காவல் நிலையத்தில் தன்னை போன்ற பல அப்பாவி தமிழர்கள் இருப்பதை பார்க்கிறான். காவல் அதிகாரி அனைத்து அப்பாவிகளையும் சுட்டுத்தள்ள திட்டம் தீட்டுகிறார் இதனை அறிந்த ஹீரோ பொய் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பிக்கிறார். இவர்கள் யார்? செம்மர கடத்தலின் பின் உள்ள நெட்ஒர்க் என்ன என்பதுடன் இப்பிரச்னையில் சிக்கும் அப்பாவி தமிழர்களின் வலியை எக்ஸ்போஸ் செய்ய முதல்வதே இப்படத்தின் கதை.
நாயகன் வெற்றி முந்தைய படங்களை விட நடிப்பில் தேறி வருகிறார் என்றாலும் அதிரடி அவதாரம் எடுக்கும் போதெல்லாம் அஷ்டகோணல் மூஞ்சிக்கு சொந்தகாரராகி விடுகிறார். நாயகி தியா மயூரியாம்.. வந்தார்.. சென்றார்..விவசாயி ரோலில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவமான நடிப்பினால் அசத்துகிறார்.வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், நாயகியாக நடித்திருக்கும் தியா மயூரிக்கா, மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
கேமராமேன் சுரேஷ்பாலா கைவண்ணத்தில் திருப்பதி வனப்பகுதியின் அழகையும், ஆபத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதுடன், இரவு நேர காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நாட் பேட் ரகமே…
டைரக்டர் குரு ராமானுஜம் சத்குரு பக்தர் போலும்,.அவர் வெப்சைட்டை அப்படியே உள்வாங்கி ஸ்கிரிப்ட் பண்ணியவர் இண்டர்வெல்லுக்கு பிறகு ஏதேதோ செய்து படத்தின் ஓட்டத்தை தடை செய்து விட்டார். செம்மரக்கடத்தல், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் போன்றவற்றை விவரித்து முதல்பாதி படம் சஸ்பென்ஸாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு போய் இரண்டாம் பாதியில் நாயகன் என்ற பெயரில் ஒரு ஜீவனை உலாவ விட்டு நாம் பயபக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்கு பின் செம்மரக் கடத்தல், கொலை என்று சொல்வது எடுபடவில்லை
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் குரு ராமானுஜம்
மார்க் 2.5/5