சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு ஒரு நாள் முழுவதும் பயணம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.!

சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு  ஒரு நாள் முழுவதும் பயணம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.!

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. ஏற்கனவே பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இந்த சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 ரூபாய்க்கு சுற்றுலா சிறப்பு பயண அட்டை எடுத்தால் ஒரு நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி 150 ரூபாய் செலுத்தி இந்த இந்த சிறப்பு அட்டையை வாங்கி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். பயண முடிவில் சிறப்பு அட்டையைத் திரும்ப கொடுத்து 50 ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும் இந்த சலுகையைப் பயன்படுத்தலாம் எனவும், ஒரு நாள் மட்டுமே இந்த சிறப்பு பயண அட்டை செல்லுபடியாகும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக பேடிஎம் செயலியில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பேடிஎம் செயலியில் சென்னை மெட்ரோ என சர்ச் செய்து அதிலேயே டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ஸ்டேஷனில் இந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பயணம் செய்ய முடியும். இந்த வசதி பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த சேவைகள் தற்போது 20% கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!