இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் -கேரளாக் கலக்கல் – வீடியோ!

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் -கேரளாக் கலக்கல் – வீடியோ!

கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் பகுதியில் தனியார் தொழில் முனைவோர்களுடன் இணைந்து கண்ணாடி பாலம் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் பிக்சர்ஸ்க் மலை பிரதேசத்தில் நீளமான கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் ஆகும். கோலாஹலமேடு பகுதியில் உள்ள இந்த கண்ணாடி பாலம் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். தனக்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட மாரிமுத்து.. பரவும் போட்டோ! மிக தூரத்தில் உள்ள முண்டக்காகயம், குட்டிக்கல் மற்றும் கோக்காயார் ஆகிய தொலை தூர பகுதிகளை கூட இந்த கண்ணாடி பாலத்திலிருந்து ரசிக்கலாம். இந்த பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. முதல் நாள் என்றாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இந்த பாலத்தை சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார். இவருடன் எம்எல்ஏக்கள் வாழூர் சோமன், எம்.எம். மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் 5 அடுக்கு கண்ணாடிகளால் 3 கோடி ரூபாய் செலவில் 120 அடி நீளத்திற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கு ரூ 3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 பார்வையாளர்கள் இந்த பாலத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்கலாம், வயது வித்தியாசமின்றி குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ரூ 500 கட்டணமாக வசூலிக்கப்டுகிறது. இந்த பாலத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிடலாம். இந்த பாலத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் திரில்லிங்கான அனுபவத்தை பெறலாம். இதற்கு சாகச பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பெயர் கண்டீலீவர் கண்ணாடி பாலம். .

மற்ற விளையாட்டு நிகழ்வுகளான ஸ்கை விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கர் எஜெக்டர், ஃப்ரீ பால், ஜியாண்ட் ஸ்விங் மற்றும் ஜிப் லைன் ஆகிய விளையாட்டுகளும் உள்ளன. ஆனாலும் கண்ணாடி மேல் நடப்பதும் கண்ணாடியின் முனைக்கு சென்று 3500 அடி ஆழ பள்ளத்தை பார்ப்பதும் திகிலூட்டும் சம்பவம் இருக்கிறது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கு வந்தால் நிச்சயம் மறக்க முடியாத திகில் அனுபவத்தை பெறலாம். 35 டன் ஸ்டீல், ஜெர்மனி கண்ணாடி கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!