தூங்கிய பயணியை எழுப்பாத ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.7000 ஃபைன்!

தூங்கிய பயணியை எழுப்பாத ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.7000 ஃபைன்!
இந்த செய்தி உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணி, இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அவசர அழைப்பு வருவது போன்ற வசதியையும், ரயிலில் பயணம் செய்ய உள்ள பயணிக்கும் ரயில், அவர் ஏற வேண்டிய ஸ்டேஷனுக்கு வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் அலாரம் அழைப்பு வரும் வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகைய முன்னெச்சரிக்கை அழைப்புக்களை பெறுவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் பாரத் பி.பி.ஓ., ஆகியவற்றில் ரயில்வே அவசர சேவை எண்ணான 139ல் வாய்ஸ் கால் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போன்று, பயணி தனது பி.என்.ஆர்.,நம்பர், ஸ்டேஷனின் பெயர், ஸ்டேஷனின் எஸ்.டி.டி., கோடு போன்றவற்றை அறிய விரும்பினாலும் 139 அவசர அலாரம் அழைப்பு மூலம் பெற முடியும் என ரயில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 139 என்ற ரயில்வே அவசர சேவை எண் ஆண்டு முழுவதும் அனைத்து நேரமும் இயங்கக் கூடியதாகும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு, ரயில் புறப்படும் அல்லது போய் சேரும் நேரம், ரயில் தற்போதுள்ள இடம், அதன் கட்டணம் ஆகியவற்றை பெற முடியும். இந்த சேவை எண் மூலம் உணவையும் ‘புக்’ செய்ய முடியும். தக்கல் டிக்கெட் நிலவரம், டிக்கெட் ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறும் விதிமுறைகள், பிளாட்பார்ம் நிலவரம் போன்றவற்றையும் 139 சேவையும் மூலம் பெற முடியும்
 wake apr 30
இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கார்க். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு கோவை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.இவர் கோட்டா என்ற ரயில் நிலையத்தில் இறங்க முன்பதிவு செய்திருந்தார். இதற்காக ரயில்வேயில் உள்ள அலர்ட் என்ற வசதியை பயன்படுத்தியுள்ளார். 139 என்ற ரயில்வேயின் வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, கோட்டா ரயில் நிலையம் வந்தால் அலர்ட் செய்து எழுப்பி விடவும் என கூறியுள்ளார். அதற்கு சேவை மையம் சார்பில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் கோட்டா ரயில் நிலையம் வந்த போதும் கூட எந்த ஒரு அலர்ட்டும் ரயில்வே சார்பில் செய்யவில்லை. கடைசியில் சுதாரித்து ரயில் கிளம்பும் போது ஒரு வழியாக அவசர, அவசரமாக இறங்கி உள்ளார்.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மீது கிரிஷின் தொடந்த வழக்கில், ரயில்வே 20,000 எனக்கு தரவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ரயில்வே கூறியிருந்தது. விசாரணையின் முடிவில் கிரிஷ்க்கு 5,000 ரூபாய் இழப்பீடாக தரவேண்டும் என்றும், வழக்கு செலவு ரூ. 2000 சேர்ட்த்து 7000 ரூபாய் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.