பாஜக பயன்படுத்தும் பொய் என்னும் மாயை விரைவில் மறையும் !- ராகுல் நம்பிக்கை!

பாஜக பயன்படுத்தும் பொய் என்னும் மாயை விரைவில் மறையும் !- ராகுல் நம்பிக்கை!

“ இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 10 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருப்பது மர்மமாக இருக்கிறது” என்று வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தியை மேற்கோள் காட்டி பொய்களை அரசு எந்திர அமைப்புகள் மூலமாக உண்மை என்று வெளியிடுகிற கலையை பாஜக சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல் விவகாரம், எல்லையில் இந்தியா, சீன ராணுவம் மோதல் போன்ற விவகாரங்களில் மத்தியஅரசை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக காந்தி இன்று பாஜக பொய்களை நிறுவன மயமாக்கி வருகிறது, அதாவது பொய்களை உண்மை என்பதாகக் காட்டி வருகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

தன் கமெண்டில் , ‘இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளி விபரங்களை மறைத்து உள்நாட்டு உற்பத்தி அளவு அதிகரித்ததாக அரசு அமைப்புகளை கொண்டு புள்ளி விவரங்களை வெளியிடச் செய்தது பாரதிய ஜனதா கட்சி.இந்திய சீன எல்லைப்பகுதியில் இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. அதன் ஆக்கிரமிப்பு பற்றிய செய்திகள் வெளிவராமல் ஊடகங்களை அச்சுறுத்தி தடுத்து நிறுத்தி உள்ளது பாரதிய ஜனதா அரசு.

நாடு முழுக்க கொரோனா வைரஸ் கடுமையாக பரவியுள்ளது. அரசின் செயலற்ற தன்மை காரணமாக மக்கள் பலியாகி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்களை கண்டு அறிவதற்கான சோதனைகளை அரசு கட்டுப்படுத்தி விட்டது. அதனால் புதிதாக கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கையை குறைத்து காட்டப்படுகிறது. அதேபோல கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கையும் குறைவாக காட்டப்படுகிறது. இப்படி உண்மை புள்ளிவிவரங்களை மறைத்து மக்களுக்கு ஒரு கவர்ச்சியான தோற்றம் இருக்கும் நிலையை பொய்கள் மூலமாக அரசு எந்திரங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இத்தகைய மாயை நிரந்தரமாக இருக்க முடியாது. இந்த மாயை கட்டாயம் ஒருநாள் உடைந்து போகும். அரசின் பொய்களுக்கு மக்கள் உரிய விலையை தரவேண்டிய கட்டாயம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்

Related Posts