🔪உளவியல் திரில்லர் கதை: ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரீமியர்!
நிஜம் எது, நிழல் எது என்று உங்களால் பிரித்தறிய முடியாத சூழலில், உங்கள் சொந்த மனமே உங்களுக்குப் பொய் சொல்ல ஆரம்பித்தால் எத்தகைய உளவியல் அதிர்ச்சி உண்டாகும்? இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் ஒரு திகில் பயணமாக, மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் பிரீமியர் ஆகிறது.
இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்டிராத, ஆனால் பார்த்திராத ஒரு புதிய களத்துடன் இந்தக் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் திடுக்கிடும் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொடூரமான கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியூட்டும் மர்மங்களைத் தர இருக்கிறது.

🎬 திறமைகளின் சங்கமம்
அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில், நடிகர்கள் கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஸ்டீபன்’ திரைப்படம், தமிழில் தனித்துவமான கதைகளை வழங்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. கதைக்கேற்ற இதன் மிரட்டலான இசையும், உணர்வுகளும் பார்வையாளர்களைத் திரையுடன் கட்டிப் போடும்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் இது குறித்துப் பகிர்ந்து கொண்டதாவது:
“தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களைக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் ‘ஸ்டீபன்’ படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லரான ‘ஸ்டீபன்’, கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை ‘அடுத்து என்ன?’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் ஆகியோரின் திறமைகளை வெளிப்படுத்தும் கதையாகவும் இது இருக்கும். தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்” என்றார்.
🤫 அமைதியான சீரியல் கில்லர்
அறிமுக இயக்குநர் மிதுன் படம் குறித்துப் பகிர்ந்து கொண்டதாவது:
“அமைதியான, திட்டமிட்டுச் செயல்படும் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதைதான் ‘ஸ்டீபன்’. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களைத் தன்னுள் சுமந்து செல்கிறார் அவர். கோமதி சங்கர், தீவிரமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தக் கதையை மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும் உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். இந்தக் கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸ் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.”
தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் ‘ஸ்டீபன்’ பார்வையாளர்களையும் அழைக்கிறார்.
📽️ தொழில்நுட்பக் குழு விவரம்:
‘ஸ்டீபன்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் பிரீமியர் ஆகிறது.
கதிரவன்


