தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி!

தி வில்லேஜ்  சீரிஸின்  சிறப்புக் காட்சி!

பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் சீரிஸான, தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சியைச் சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் நடிகர்கள் மற்றும் படைப்பாளர்களுடன், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரபல முகங்களும் கலந்து கொண்டனர், அவர்கள் இந்த திகில் தொடரைப்ப்பார்த்து முழு மனதுடன் தங்கள் ஆதரவையும் அன்பையும் தெரிவித்தனர்.

தி வில்லேஜ் சீரிஸை மிகவும் ரசித்து, முதல் 3 எபிசோட்களைப் பார்த்த திரை படைப்பாளிகள் புஷ்கர்-காயத்ரி …“தி வில்லேஜின் முதல் மூன்று எபிசோட்களை நாங்கள் பார்த்துவிட்டோம், இது மிகவும் சுவாரஸ்யமான படைப்பு. இப்போது பிரைம் வீடியோவில் எல்லா எபிசோட்களும் இருப்பதால், உடனடியாக மீதமுள்ளவற்றைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம், இதுவே இதைப் பற்றிச் சொல்லக்கூடிய சிறந்த விஷயம் !”

இயக்குநர் சுதா கொங்கரா, சீரிஸ் இயக்குனர் மிலிந்த் ராவைப் பற்றிய ஒரு வேடிக்கையான விசயத்தைப் பகிர்ந்துகொண்டார், “மிலிந்துக்கு திகில் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவர் நடு இரவில் தான் எப்போதும் திகில் படங்களைப் பார்ப்பார்! அவன் திகில் படைப்புகளை கண்டிப்பாக சிறப்பாக தருவான் என்று எனக்குத் தெரியும்!” என்றார்.

நடிகர் சிபி சத்யராஜ் கூறுகையில், “இந்தத் சீரிஸ் மிகவும் சிறப்பான தமிழ் சீரிஸாக உள்ளது. மிலிந்தின் முதல் படமான அவள் திகில் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதே போல் இந்தத் சீரிஸை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் கூறுகையில், மிலிந்தின் இயக்கம் குறித்துப் பாராட்டினார், “இந்த கதையை 6 அத்தியாயங்களில் எடுப்பது எளிதான விஷயம் அல்ல, மிலிந்த் அதை நன்றாகச் செய்துள்ளார். முழு குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ”

தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “தி வில்லேஜ் ஒரு புது யுக அனுபவம். OTT இல் மிகவும் தனித்துவமான ஒன்றைக் கொண்டு வந்த பிரைம் வீடியோவிற்கு வாழ்த்துகள்.” என்றார்

error: Content is protected !!