மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் கீழ் 4 வீரர்கள் தேர்வு!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் கீழ் 4 வீரர்கள் தேர்வு!

க‌கன்யான் என்னும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும், தேர்வு செய்யப்பட்ட வீர‌ர்களுக்கான பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரம் தொடங்கும் எனவும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “சந்திரா யன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும். சந்திராயன்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற் கான ரோவரும் இடம்பெறும். அந்த லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், திட்டத்தை ஏவுவதற்கு 365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற 4 வீரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ககன்யான் விண்கலத்தில் அனுப்புவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ரஷ்யாவில் பயிற்சி தொடங்கும்.

சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்டு சிறப்பாக செயல்படும் ஆர்பிட்டர் தொடர்ந்து 7 ஆண்டு களுக்கு தகவலை அனுப்பும்.  முன்னர் திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால், லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க முடிய வில்லை.

இஸ்ரோ தனது இரண்டாவது விண்வெளி ராக்கெட் ஏவுதளத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது” என்றார் இஸ்ரோ தலைவர் கே. சிவன்.

Related Posts