‘பீட்சா 3 மம்மி’- விமர்சனம்!

‘பீட்சா 3 மம்மி’- விமர்சனம்!

சுந்தர்.சியின் அரண்மனை பேய் படம் 3 பாகங்கள் வந்தது. அது போல் விஜய்சேதுபதி நடித்த ‘பீட்சா’ பேய் படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா படத்தின் 3-ம் பாகம் ‘பீட்சா 3 மம்மி’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதிலாவது புதுசாக எதாவது சொல்லி இருப்பார்களா ? என்று பார்த்தால் உதட்டை பிதுக்க வைத்து அனுப்புகிறார்கள்.

சென்னையில் புதிதாக ஒரு ஹோட்டல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் நலன் (அஸ்வின்). அந்த ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர்களில் ஒருவர் மம்மி பொம்மை ஒன்றை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதை அடுத்து அங்கே தொடர்ந்து விபரீத சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ஆராய்ச்சியாளராம் அவரின் காதலியாக வரும் பவித்ரா மாரிமுத்து. ஆனால் போலீஸ் அதிகாரி நாயகியின் அண்ணன் (கௌரவ் நாராயணன்) இவர்களது காதலுக்கு எதிரியாக இருக்கிறார். இந்நிலையில் நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது. அது ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? என்பதைத் திகிலாக சொல்ல முற்பட்டு இருப்பதே இப்’ படத்தின் கதை.

ஹீரோ அஷ்வின் காகுமானு தன்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் சரியாக செய்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை நினைத்து குழப்பமடைவது, காதலியின் அண்ணன் கொடுக்கும் தொல்லை என அனைத்து காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.ஆனால் பெரும்பாலும் டல்லாக இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.நாயகி பவித்ரா அடடே சொல்ல வைக்கிறார், என்றாலும் இவருக்கு ஸ்பேஸ் கொடுக்க இல்லை. ஹோட்டல் எம்ப்ளாயி ஆக வரும் காளி வெங்கட்,தனிக் கவன்ம் பெறுகிறார் அனுபமா குமார் மற்றும். இவரது மகளாக வரும் அபி நக்ஷத்ரவும் தனக்கு கொடுப்பட்ட கேரக்டருக்கு என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார்கள் . வில்லனாக வரும் கவிதா பாரதி ஓவர் ஆக்டிங் கொடுத்து கடுபேற்றுகிறார்,

கேமராமேன் பிரபு ராகவ்வின் கைவண்ணத்தில் பேய்ப் படங்களுக்கே உரிய லைட்டிங் அபாரமாக அமைந்து படத்தை ரசிக்க வைக்கிறது. மியூசிக் டைரகடர் அருண் ராஜ் தயவில் பின்னணி இசையும் நன்றாக கை கொடுத்துள்ளது.

ஆனால் ஒரு படத்துக்கு தேவையான கதை மற்றும் திரைக்கதையில் கொஞ்சமும் அக்கறைக் காட்டாத டைரகர் திகில் காட்சிகளிலாவது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியிருக்கும் இயக்குநர் மோகன் கோவிந்த், பேய் தயாரிக்கும் சிவப்பு இனிப்பை வைத்து நம்மை பயமுறுத்த முயற்சித்திருப்பதுதான் பெரும் சோகம். அதிலும் பேய்களின் மேக் அப்பில் கூட போதிய பங்களிப்பை செய்ய தவறி விட்டதால் இந்த பிட்சா 3 மம்மி எடுபடவில்லை!

மார்க் 2.25/5

error: Content is protected !!