தமிழகத்தில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு : ஐசிஎம்ஆர் ஆய்வு அதிர்ச்சி தகவல்!.

தமிழகத்தில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு : ஐசிஎம்ஆர் ஆய்வு அதிர்ச்சி தகவல்!.

ர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை (DIABETICS) ஃபேஷனாக நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நீரிழிவு நோயால் தற்போது 30 வயதைக் கடந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் நகரங்களில் மட்டுமே பரவலாக இருந்த இந்த சர்க்கரை நோய் தற்போது கிராமப்புறங்களிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதேபோல், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

அதாவது இந்திய அளவில் நீரிழிவு நோய் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதில்தான் நம் நாட்டில் 10 கோடி (11.4%) பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 16.4% பேர், கிராமங்களில் 8.9% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேருக்கும், அடுத்தப்படியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேருக்கும், குறைந்த பட்சமாக உத்தப்பிரதேசத்தில் 4.8% பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 15.3% பேருக்கும், தமிழ்நாட்டில் 10.2% பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளன. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு கிராமங்கள், நகரங்களில் சமமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இருந்தநிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts