June 4, 2023

பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது?

நம்ம ஜனங்க திரும்பத் திரும்ப பயன்படுத்தி வரும் பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி-யின் துணை பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் – ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது .இதற்கான அறிவிப்பை மாநில அளவிலான பாதுகாப்பு அமைப்பு மற்றும் மாநில அளவிலான நாணய நிர்வாகக் குழுவிடம் நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2019ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஊதா நிற 100 ரூபாய் நோட்டுகள் தான் மக்கள் அதிகளவில் புழக்கத்தில் பயன்படுத்தி வரும் நிலையில், பழைய 100 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதேவேளையில் மக்கள் கையில் இருக்கும் சில பழைய 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

மேலும் இந்தியாவில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு 15 வருடங்கள் ஆன பின்பும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தைப் பெறத் தயங்குகின்றனர். இதனால் வங்கிகளில் அதிகளவிலான 10 ரூபாய் நாணயங்கள் குவிந்துகிடக்கிறது. இந்த நிலை உடனடியாக மாற வேண்டும்.

எனவே மக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணய புழக்கத்தை அதிகரிக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் புதிய வழிகளை வங்கிகள் கண்டறிய வேண்டும் எனவும் விவாதம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் சொல்லாது எனப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும், ஆனால் அதன் புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.