32°C
விளம்பரம்
Advertisement

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா அபாரம்!

admin Published: August 28, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


லக அளவில் சதுரங்க விளையாட்டுத் துறையில் இந்தியாவின் கொடியை மீண்டும் ஒருமுறை உச்சத்தில் பறக்கவிட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா. அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

வரலாற்றுச் சாதனை மற்றும் பரிசுத் தொகை

இந்த வெற்றியைத் தொடர்ந்து, கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை முறியடித்து இந்தச் சாதனையை அவர் எட்டியுள்ளார். இந்த அசத்தல் வெற்றிக்காக அவருக்கு 2,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.91 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

பின்னடைவில் இருந்து மீண்ட கம்பேக் ஆட்டம்

இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானா பலமான ஆதிக்கத்தைச் செலுத்தி, 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால், சற்றும் மனம்தளராத பிரக்ஞானந்தா, ரேபிட் சுற்றில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று போட்டியைத் தன் பக்கத்திற்குத் திருப்பினார்.

தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் சுற்றிலும் இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேரக் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அமைதியாகவும் வியூகத்துடனும் காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா, இறுதியில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்திய சதுரங்கத்தின் பெருமை

சமீபகாலமாக உலகச் சதுரங்க அரங்கில் இந்திய வீரா்கள் படைத்து வரும் சாதனைகளின் தொடர்ச்சியாகவே பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. ஆரம்பப் பின்னடைவில் இருந்து மீண்டு வந்து வெற்றியைச் சாத்தியமாக்கிய அவரது மன உறுதியும் திட்டமிடலும் விளையாட்டு உலகினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

உடனடி செய்திகள்