செய்தியைக் கேட்க / Listen to News
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாக உள்ள 80 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்ப மத்திய பொதுச்சேவை ஆணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசுப் பணியில் இணையலாம்.
காலிப்பணியிடங்களின் விவரம்
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 80 பணியிடங்களில் பிரிவு வாரியான இடஒதுக்கீடு விவரங்கள்:
பொதுப்பிரிவு: 29
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS): 8
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 18
பScheduled Caste (SC): 15
Scheduled Tribe (ST): 10
இதில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 3 பணியிடங்கள் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 2026 செப்டம்பர் 11 ஆம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
பொதுப்பிரிவினர்: 35 வயது வரை
ஒபிசி பிரிவினர்: 38 வயது வரை
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்: 40 வயது வரை
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அரசால் 10 ஆண்டுகள் கூடுதல் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அதிகபட்சமாக 56 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும். நிறுவன சட்டம் (Company Law), தொழிலாளர் சட்டங்கள் (Labor Laws) மற்றும் பொது நிர்வாகம் (Public Administration) ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின்படி (Level 10) அடிப்படை ஊதியமாக மாதம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு (Recruitment Test) மற்றும் நேர்காணல் (Interview) ஆகிய இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Multiple Choice Questions) 2 மணி நேரம் நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருக்கும். இத்தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் பிடித்தம் செய்யப்படும்.
எழுத்துத் தேர்வுக்கு 300 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 100 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்:
பொதுப்பிரிவினர்: 50 மதிப்பெண்கள்
ஒபிசி பிரிவினர்: 45 மதிப்பெண்கள்
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 40 மதிப்பெண்கள்
பாடத்திட்டம் மற்றும் தேர்வு மையங்கள்
எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், பொது அறிவியல், தொழில்முறை உறவுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம், கணக்கியல், தணிக்கை மற்றும் காப்பீடு கோட்பாடுகள், மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவு மற்றும் ஒபிசி ஆண்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in அல்லது https://www.upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் Online Recruitment Application (ORA) பகுதிக்குச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே One Time Registration (OTR) பதிவு செய்யாதவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.Assistant Provident Fund Commissioner – EPFO பணியைத் தேர்வு செய்து படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதிகளைச் சரியாக உள்ளிட்டு தேவையான சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் 25 ரூபாயை இணையவழியில் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நகல் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
முக்கியத் தேதி
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11.09.2026 (மாலை 6.00 மணி வரை)
