தேசிய அறிவியல் தினம் : மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா!

தேசிய அறிவியல் தினம் : மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா!

ந்திய மண்ணில் பிறந்து, உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க்து/அநேகமாக. தேசத் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

இதை அடுத்து மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப் 28ம் தேதி தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக் மத்தியஅரசு அறிவியல்பூர்வமான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 28ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை பெசன்ட் நகர், மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களில் நிலா திருவிழா 3 நாட்கள் நடைபெறும் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி அறிவித்து உள்ளது.

இது குறித்துதமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன.

வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தொலை நோக்குடன் பல்வேறு இடங்களுக்கு சென்று இன்று (25ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும் அன்றைய நாளில் தெரியக்கூடிய நட்சத்திர கூட்டங்களையும் காண்பிக்க உள்ளனர்.

இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கியை கொண்ட வைணுபாப்பு அப்சர்வேட்டரி சார்பிலும் இந்த 4 நாட்களும் நிலா திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் நிலா திருவிழா நடைபெறுகிறது. இன்று (25ந்தேதி) பெசன்ட் நகர் கடற்கரை வடக்கு பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெரினா கடற்கரை பாரதியார் சிலை அருகிலும் திங்கட்கிழமை கிண்டி தேவதாஸ் அப்சர்வேட்டரியிலும், செவ்வாய்க்கிழமை கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட 30 இடங்களில் நடைபெறுகிறது என்றார்.

error: Content is protected !!