லேடீஸ் விவகார சர்ச்சையில் சிக்கிய மேகாலயாவின் கவர்னர் ராஜினாமா?
வி.சண்முகநாதன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். முதுகலை படிப்பை முடித்து அரசியல் அறிவியல் பாடத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். 1962 ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்த இவர் பின்னர் பா.ஜ.க வில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். முத்தாய்ப்பாக மேகாலயா ஆளுநராக 2015-ல் நியமிக்கப்பட்டவர் இன்று ராஜினாமா செய்து விட்டார்..

மேகாலயா ஆளுநராக இருந்த தமிழர் சண்முகநாதன் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களுக்கு கூடுதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இதனிடையே கடந்த 24-ந் தேதியன்று மேகாலயா ராஜ்பவன் மக்கள் செய்தி தொடர்பாளர் பதவிக்கான நேர்காணலுக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதலில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றி சின்மோயி தேகா என்ற பெண்ணுடனான நெருக்கம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழும்பி சண்முகநாதன் ராஜினாமா செய்ய வேண்டுமென கோரி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போராட்டங்கள் வெடித்த நிலையில் சண்முகநாதன் தன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 98 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.இந்த கடிதத்தின் நகல் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் முகுல் சங்மா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
11 அம்சங்கள் அடங்கிய அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருந்தது இதுதான்:
”ஆளுநர் மாளிகையின் மாண்புக்கு களங்அகம் தரும் வகையில் ஆளுநர் சண்முகநாதன் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையை ( ராஜ்பவன்) இளம்பெண்களின் விடுதி போல மாற்றிவிட்டார்.
இளம்பெண்கள் தமது விருப்பம் போல் வந்து தங்கவும் அல்லது திரும்பவும் ஏற்ற இடமாக மாற்றப்பட்டுவிட்டது. தடையின்றி அவரது அறைக்கு அவர்கள் நேரடியாக வந்து செல்கிறார்கள். ஆளுநரின் இல்லத்தின் பாதுகாப்பும் விட்டுக்கொடுக்கப்படுகிறது
இரண்டு மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஒரு சமையல் ஊழியர், இரவுப் பணி நர்ஸ் ஆகியோரை ஆளுநர் நியமித்துள்ளார். அவர்கள் அனைவருமே பெண்கள். அவருக்காக பணி செய்ய பெண்களையே அவர் தேர்வுசெய்துள்ளார். தனது தனி செயலர் ஆண் என்பதால் அவரை ஆளுநர் செயலகத்துக்கு மாற்றிவிட்டார்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக்கும்


