‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு!

‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு!

வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2018-ம் ஆண்டில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாச்சு. அப்பவே 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப் பட்ட நிலையில், பூஜை கூட போடவில்லை.

பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிச்சார்.

இப்படி மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளி யாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டுச்சு.

இதில் திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததாலும் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்படு என்ன்னு அறிவிப்பு வெளியாச்சு.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் மற்றும் எவர் சிங்கிள் பிரேம்ஜி ஆகியோரும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் ஹேப்பி ஆயிட்டாய்ங்க

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்…

யுவன்ஷங்கர் ராஜா – இசையமைப்பாளர்
ரிச்சர்ட் எம் நாதன் – ஒளிப்பதிவாளர்
பிரவீன் கே.எல் – படத்தொகுப்பாளர்
ராஜீவன் – தயாரிப்பு வடிவமைப்பாளர்
ஸ்டன்ட் சில்வா – சண்டைப் பயிற்சி
சேகர் – கலை இயக்குனர்
வாசுகி பாஸ்கர் – ஆடை வடிவமைப்பாளர்
டியூனி ஜான் – டிசைனர்
ஜான் – மக்கள் தொடர்பாளர்

படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது, சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இன்னும் முக்கியமான நடிகர் படத்தில் இணைய உள்ளார். விரைவில் அவர் பற்றிய தகவல் வெளியிடப்படும். இந்நேரத்தில் ரசிகர்கள்தான் சிம்புவின் கேரெக்டர் பெயரை தேர்ந்தெடுக்கவேண்டும்.

நாங்கள் கதையோடு சரியாகப் பொருந்திப் போகும் பெயரை தேர்வு செய்வோம். அந்த பெயரை தேர்வு செய்து அனுப்புபவர் ஒரு நாள் முழுக்க மாநாடு படப்பிடிப்புத் தளத்தில் எங்களோடு இருக்கலாம் என அறிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்புத் தளத்திற்கு செல்லவிருக்கிறது குழு என்றார்.

error: Content is protected !!