ஆர்டிஃபிஷியல் லைட்டுகளால் அதிகரிக்கும் ‘ஒளிமாசு’ ஆபத்து பற்றி அறிஞ்சுக்கலாமே!

ஆர்டிஃபிஷியல் லைட்டுகளால் அதிகரிக்கும்  ‘ஒளிமாசு’ ஆபத்து பற்றி அறிஞ்சுக்கலாமே!

சுற்றுப்புற மாசுபாட்டினை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவை முறையே, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் மண் மாசுபாடு ஆகும். இவை தவிர, மற்றொரு தீவிர சுற்றுப்புற மாசுபாடு உள்ளது. தேவையற்ற இடங்களில், செயற்கை விளக்குகள் உமிழும் ஒளியே, ஒளி மாசுபாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒளி மாசுபாட்டிற்கான காரணங்கள் என்று பார்த்தால் 1. மோசமான அமைப்பு கொண்ட ஒளி சாதனங்களை பயன்படுத்துதல். மோசமான ஒளி சாதனங்கள், ஒளி கதிர்களை மேல்நோக்கி விரயம் செய்கின்றன. எனவே ஒளி ஆற்றல் மற்றும் பணம் வீணாகின்றது. 2. அதிகப்படியாக ஒளிரும் செயற்கை விளக்குகள்.

lighy pollution

இத்தகைய ஒளி மாசுபாடு மனிதர்களையும், வன உயிரினங்களையும் கடுமையாக பாதிக்கின்றது. குறிப்பாக, இரவு நேர பாலூட்டிகளான வவ்வாள், கடல் ஆமை போன்ற ஊர்வன இனங்கலும், மற்றும் இரவு நேர நீர்நில வாழ்விகலும், ஒளி மாசுபாட்டினால் மோசமாக பாதிக்கப்படுகின்றன. ஒளி மாசுபாட்டின் காரணமாக, இந்த இனங்களின், இனப்பெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டுல்லது, இதன் காரணமாக இந்த இனங்களின் எண்ணிக்கையும் குறீப்பிடதகுந்த அளவு சுருங்கியுள்ளது. மேலும், அதிகப்படியான ஒளியின் காரணமாக, தங்களை கொள்ள வரும் விலங்குகலுக்கு எளிதில் இறையாகும் வாய்ப்பும் உள்ளது. சில குறிப்பிட்ட உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பொதுவாக, பூச்சிகள் செயற்கை விளக்குகளால் ஈர்க்கப்பட்டு, இரவு முழ்வதும் ஒளி அருகே இருக்கின்றன. இதன் கராணமாக, இப்பூச்சிகளின் இனச்சேர்க்கை மற்றும் நகர்தல் தடுக்கப்படுகின்றது, எனவே, இந்த பூச்சி இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகின்றது. அதிக ஒளி, இப்பூச்சிகளை, அவற்றை கொள்ளும் விலங்குகலுக்கு எளிதில் இரையக்கும் வாய்பையும் அளிக்கின்றது. சில உயிரினங்கள் தங்களுடைய உணவு அல்லது மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை நம்பியிருக்கின்றன. ஒளி மாசுபாடு பூச்சி இனங்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அவற்றை நம்பிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்கிறது.

வவ்வால் போன்ற பறவைகள், இரவு நேரங்கலில்தான் இடம் பெயரவோ அல்லது வேட்டையாடவோ செய்கின்றன. இயற்கையாகவே இருண்ட பகுதிகளில் பிரகாசமான விளக்குகள், தங்களின் ஒளியை உமிழ்வதால், இப்பறவைகளின் இருள் சார்பு பண்பு மிகவும் பாதிக்கப்படுகிறது. பறவைகள் ஒளி மூலங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றன. இதனால் பறவைகள் குழப்பப்பட்டு, ஒளி மூலங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களின் மீது மோதி உயிரிழக்கின்றன. இதைப்பேன்று, கடல் பறவைகள் கடலில் உள்ள கலங்கரை விளக்கம், மற்றும் காற்று விசையாழிகள் மீது மோதி உயிரிழக்கின்றன. செயற்கை விளக்குகளினால், பறவைகள் தொடர்ந்து அலையவும் மற்றும் அவற்றின் இயற்கையான இலக்கை அடைய முடியாமலும் போகலாம்.

பொதுவாக, பெண் கடலாமைகள் கடலிலிருந்து மிகவும் தொலைவான மற்றும் இருண்ட கடற்கரை பகுதிகலிள் கூடு கட்டவும் அதன் முட்டைகளை பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனால், கடலோர விளக்குகள் உமிழும் ஒளியினால், இக்கடலாமைகள் தங்களது முட்டைகளை வைக்க இடம் தெரியாமல் குழம்புகின்றன. மேலும், இவைகள் கடலிலிருந்து இருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிடுகின்றன. சிலசமயங்களில் இவைகள் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகலிலும் தங்களது கூட்டினை கட்டி முட்டைகளை இடுகின்றன. ஒருவேலை, இவைகள் மீண்டும் கடலிற்க்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அழிந்து விடுகின்றன. ஒளி மாசு ஊர்வனவற்றிற்க்கு பசியின்மையை தூண்டுவதாகவும், இதனால், இவைகளின் எடை குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களையும், ஒளி மாசுபாடு கடுமையாக பாதிக்கின்றது. குறிப்பாக சீரற்ற இடைவெளியுள்ள சாலைகளின் வழியே மக்கள் செல்லும் போது செயற்கை விளக்குகளின் அதிகப்படியான ஒளியினால், சரியான வழிகாட்டலுக்கு பதிலாக குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும், மனிதர்களின் பார்வையினையும், இச்செயற்கை விளக்குகளின் அதிகப்படியான ஒளி பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.
மேலும், அதிகப்படியான ஜொலிக்கும் ஒளி விளக்குகளினால் மின்சார ஆற்றலும் வீணாகிறது. இதனிடையேதான் ஒளி மாசு காரணமாக இரவு நேரங் களில் விண்ணில் உள்ள பால் வீதியை மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் காண முடிவதில்லை என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

இத்தாலியில் ஒளிமாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் முக்கிய விஞ்ஞானியான ஃபேபியோ பல்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன் செயற்கை விளக்குகளால் ஒளிரும் இரவு நேர வானத்தை கொண்ட முதல் உலக வரைபடத்தை உருவாக் கினார். தற்போது அதை மேம்படுத்தி அனைத்து நாடுகளின் மக்கள் தொகை, நிலப்பரப்பு மற்றும் ஒளிமாசு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஹெச். டி உலக வரைபடத்தை உருவாக்கி யுள்ளார்.

செயற்கை விளக்குகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வுக்கு ஃபேபியோவின் வரைபடம் உறுதுணையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த வரைபடம் மூலம் எதிர்காலத்தில் ஒளிமாசு உயருமா அல்லது குறையுமா என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஒளிமாசு விண்வெளி ஆய்வாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் வெறும் கண்களால் விண்ணை நோக்கும் சாதாரண மனிதர்களுக்கு நிச்சயம் இயற்கையின் படைப்பை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இரவு நேரத்தில் வானின் ஒளி சிறிது அதிகரித்தாலும் பால் வீதியை பார்ப்பது மனிதர்களுக்கு கடினமாகிவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிற மாசுகளை விட, செயற்கை விளக்கொளி மாசு குறைவானது தான். எனினும் ஃபேபியோ உருவாக்கிய வரைபடம் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் தெளிந்த வானம் 99 சதவீதம் வரை ஒளிமாசு அடைந்திருப்பதை காணமுடிகிறது.

சிங்கப்பூர் போன்ற உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த ஒளிமாசின் அளவு மிக அதிகமாக இருப்பதால் உண்மையான இரவு நேரத்தை மக்களால் அனுபவிக்க முடிவதில்லை என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இருளை கிழிக்கும் செயற்கை விளக்கொளியில் இருந்து எழும்பும் மாசுதான் இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதே போல் மத்திய ஆப்பிரிக்க நாடுகள், மடகாஸ்கர் ஆகிய பகுதிகள் ஒளிமாசால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு என்பதுதான் வேடிக்கை.

Related Posts