32°C
விளம்பரம்
Advertisement

ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர்

admin சேலம் Published: April 1, 2018 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) காலமான தினம்

ஒரு புகழ் பெற்ற கட்டிடச் சிற்பி

பிரிட்டனில் பிறந்தாலும் நம்ம இந்தியாவுக்கு வந்து முழுநேர கட்டிட வடிவமைப்பாளாராகி பணியாற்றினார்.

குறிப்பா உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபடுது.

கேரளாவில் லாரி பேக்கரை ஏழைகளின் பெருந்தச்சன் என்று இன்றும் பெருமையுடன் அழைக்கின்றார்கள்.

இவர் சொன்ன சில பல விஷயங்கள் எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்து கொள்ல வேண்டியவை:

இன்றைய இந்திய மக்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த தேவைகளை ஈடு செய்ய வேண்டும் எனில் பிரம்மாண்டமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு ‘சிறியதே அழகு’ எனும் அடிப்படையை நோக்கி நகர வேண்டும்.

நவீன இந்திய கட்டிடக்கலை என்று தனியாக ஒன்று உண்டா என்றால் இல்லை. சீனா, ஜெர்மனி, பெரு மற்றும் இந்திய நாட்டில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒரு பாலைவனத்தில் வைத்தால் அவைகளுக்கு இடையே ஏதேனும் வேறுபாடி உணர இயலுமா என்ன? இவைகளில் எது இந்தியாவிலிருந்து வந்தது? எது பெருவிலிருந்து வந்தது என பிரித்தறிய முடியுமா? ஆனால் இடு பொருட்கள் வேறானவை, வேறு மாதிரியான வானிலை கொண்டவை, வாழ்க்கை முறையும் வேறானவை.]

நாம் பணி செய்ய தொடங்குவதற்கு முன், அந்த கட்டிடம் எழபோகும் மனையை காண வேண்டும். அது எத்தகைய நிலம் என்பதை அறிய வேண்டும் என்பது மட்டுமல்ல (மேட்டு பகுதி, சரிவு போன்றவை), அங்கு என்ன மரங்கள் இருக்கின்றன என பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் நல்ல பார்வை கோணங்கள் வேண்டுகிறார்களா? தோட்டம் போடும் திட்டமுண்டா? பிராணிகள் வளர்ப்பதுண்டா? தண்ணீர் வசதி எப்படி? காற்றின் திசை மற்றும் மழையின் திசை எது? என பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தான் இந்த கட்டிடத்தை பயன்படுத்த போகிறார்கள் நான் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லோரையும் மண் வீடு கட்டிகொள்ள வேண்டும் என கோரவில்லை, எல்லோரும் வீடு கட்டிகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன், அந்த இலக்கை மண்ணை கொண்டு மட்டுமே அடைய முடியும். கிராமங்களில் நாம் காணும் இல்லங்கள் குறைந்தது எழுபது எண்பது வருடங்கள் பழமையானவை.

மண் எளிதாக கிடைக்க கூடியது, அதிக ஆற்றல் தேவைபடாதது. இரும்பையும் கான்க்ரீடையும் கொண்டு தான் நாம் அத்தனை வீடுகளையும் கட்ட போகிறோம் என்றால் அது நம்மால் முடியவே முடியாது. இருபது முப்பது மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அது மண்ணால் மட்டுமே முடியும்.

அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும்.

உயர் குடி, மத்திய வர்க்கம், ஏழை, பழங்குடிகள், மீனவர்கள் என வெவ்வேறு வர்க்கத்தினருக்காக கட்டிடங்கள் கட்டுவது கூடாது.

நான் ஒரு மேத்யுவிற்கும், ஒரு பாஸ்கரனுக்கும், ஒரு முணீருக்கும், ஒரு சங்கரனுக்கும் தான் கட்டிடம் கட்டுகிறேன்.]

இன்னும் எத்தனையோ மக்கள் கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு அருகில் கூட இல்லை என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டாமா? நாம், கட்டிடகலை நிபுணர்களாக, உயர்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக, இந்த பிரம்மாண்ட தேவையை போக்க மிகக் குறைவாகவே செயல்படுகிறோம்.

கட்டிடத்தை விட்டுவிடுங்கள், சிறிய குடிசை கூட இல்லாமல் இருபது மில்லியன் குடும்பங்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது.

*ஆம்.. இரும்புக் கம்பிகளுக்குப் பதிலாக மூங்கில்களைப் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தார். உள்வெளியையும் வெளி இடத்தையும் தனித்தன்மை வாய்ந்த முறையில் பயன்படுத்தினார். இதுதான் ‘லாரி பேக்கர் பாணி’ என்று பிரபலமடைந்தது.

* 1966-ல் பீர்மேட்டுக்கு வந்து தங்கி, பழங்குடி மக்களுக்கு வீடுகளை வடிவமைத்தார். பெரிய மரங்களை வெட்டாமல் கட்டிடங்களை உருவாக்கும் உத்தி, மழைநீர் சேமிப்பு வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றினார்.

* வீடுகள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் இவரது பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டன. தனது உத்திகள் குறித்து எளிய செயல் விளக்கப் புத்தகங்களைத் தானே வரைந்த ஓவியங்களுடன் வெளியிட்டார். பல கட்டிட கலைஞர்கள் இவரது செயல்படும் பாணியால் ஈர்க்கப்பட்டனர்.

* 1988-ல் இந்தியக் குடியுரிமை பெற்றார். 1990-ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

* பிரிட்டிஷ் அரசின் ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது பெற்றார். சர்வதேச கட்டிடக்கலை ஒன்றியத்தின் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். ‘லாரி பேக்கர் – லைஃப், ஒர்க்ஸ் அண்ட் ரைட்டிங்ஸ்’ எனும் இவரது வாழ்க்கை வரலாற்று நூலை கவுதம் பாட்டியா எழுதியுள்ளார். வடிவமைப்பது, எழுதுவது என இறுதிக் காலம்வரை சுறுசுறுப்புடன் இயங்கி வந்த லாரி பேக்கர் 2007-ம் ஆண்டு 90-வது வயதில் இதே நாளில் மறைந்தார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்